- Home
- உடல்நலம்
- Bad Breath : உஷார்! பல் துலக்கியும் வாயில் கெட்டவாடை வீசுதா? இப்படி ஒரு காரணமா இருக்கும்
Bad Breath : உஷார்! பல் துலக்கியும் வாயில் கெட்டவாடை வீசுதா? இப்படி ஒரு காரணமா இருக்கும்
வாய் துர்நாற்றம் வரக் காரணமான 4 விஷயங்களை இங்கு காணலாம்.

வாய் துர்நாற்றம் வீசக் காரணங்கள்
வாய் துர்நாற்றம் மோசமான விஷயம். இது தன்னம்பிக்கையை சிதைக்கும் அளவுக்கு ஆபத்தானது. பிறரிடம் பேசும்போது தயக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு பல தீர்வுகளை மக்கள் தேடி செல்கின்றனர். உதாரணமாக கிராம்பு மெல்வது, துளசி நீர் குடிப்பதை சொல்லலாம். இருவேளை பல் துலக்குவார்கள். ஆனாலும் வாய் துர்நாற்றம் வீசும். இதற்கும் பல் துலக்குவதற்கும் காரணமல்ல. மற்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசக் கூடும். இந்தப் பதிவில் 4 காரணங்களை காணலாம்.
நீரேற்றம்
நாம் போதுமான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் வாயில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது. இதனால் பாக்டீரியாக்கள் பெருக ஆரம்பிக்கின்றன. வாயை உமிழ்நீர் தான் இயற்கையாகவே சுத்தப்படுத்துகின்றன. உமிழ்நீர் அதிகம் சுரக்காத நிலையில், வாய் துர்நாற்றம் வீச தொடங்குகிறது. போதுமான அளவில் தண்ணீர் குடிக்கும் போது இந்த பிரச்சனை நிவர்த்தி ஆகிறது.
உணவுப் பழக்கம்
வாயில் துர்நாற்றம் வீச நம்முடைய உணவு பழக்கமும் காரணம். பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகள் வாயில் வெவ்வேறு வாசனைகளை கொடுக்கக்கூடியது. இது வெளிப்படையாக நமக்கு தெரிந்தவை. இது தவிர புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாகும். சர்க்கரை கலந்த உணவுகள், குளிர்பானங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை தூண்டுகின்றன. இதனால் வாய் துர்நாற்றம் வீசும்.
புகைபிடித்தல்
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு மட்டுமல்ல; வாய் சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். நீங்கள் புகையிலை வைப்பது, புகைபிடிப்பது போன்றவை வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பை குறைக்கிறது. இதனால் வாயில் வறட்சி ஏற்படும். நீங்கள் பலமுறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் வீசும்.
நோய் அறிகுறி
சில நோய்களின் அறிகுறிகள் வாய் துர்நாற்றம் மூலம் வெளிப்படலாம். சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நோய்கள் மற்றும் உடலில் உள்ள சில அடிப்படை பிரச்சனைகள் காரணமாக வாயில் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உதாரணமாக சிறுநீரகப் பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள், சர்க்கரை வியாதி, இரைப்பைக் கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இதற்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை முறைகளை பின்பற்றுவது தீர்வாக அமையும்.
கவனம்!
கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில் இளம் பருவத்தினருக்கும், குழந்தைகளுக்கும் அதிகளவில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதாக தெரியவந்தது. நீங்கள் சரியான நேரத்தில் பல் துலக்கிய பின்னரும் வாயில் துர்நாற்றம் வீசினால் அது கவனிக்க வேண்டிய விஷயம். சரியான உணவுப் பழக்கம், போதுமான நீரேற்றம் கடைபிடித்த பின்னும் வாய் துர்நாற்றம் வீசினால் ஏதேனும் நோய் அறிகுறியாக கூட இருக்கலாம். மருத்துவரை அணுகுவது நல்லது.