பித்தம் அதிகமா இருக்கா? இந்த உணவுகளை சாப்பிட்டா குறைஞ்சிடும்!
உங்களது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் அதை குறைக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Foods To Reduce Bile : நம் உடலானது பித்தம், வாதம், கபம் என்ற மூஞ்சி அடிப்படையாக க் கொண்டது. இதில் பித்தம் அதிகமாக இருந்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். பொதுவாக காலை வேளையில் எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும். குறிப்பாக காலை எழுந்தவுடன் காபி குடிப்பது பித்தத்தை அதிகரிக்க செய்யும். பித்தத்தை குறைக்க சில உணவுகளை சாப்பிட வேண்டும். எனவே சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உடலில் அதிகமாக இருக்கும் பித்தத்தை சுலபமாக குறைத்து விடலாம். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Symptoms of Bile
பித்தம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்:
- அதிக கோபம்
- அதிக பசி மற்றும் தாகம்
- உடல் உஷ்ண பாதிப்பு
- எரியும் வலியுடன் தலைவலி
- தொண்டைப்புண் அபாயம் அதிகரிப்பு - உடல் துர்நாற்றம் மற்றும் வியர்வை
- மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு, பலவீனமான செரிமானம்
Causes of Bile
பித்தம் வருப்பதற்கான காரணங்கள்:
- உப்பு, புளிப்பு, காரம் மற்றும் எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை சாப்பிடுதல். இது தவிர, பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதல்.
- வெயிலில் அதிக நேரம் இருப்பது
- டீ, காபி, ஆல்கஹால், சிகரெட் அதிகமாக எடுத்துக் கொள்வது.
- அதிக அளவு மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கம் இல்லாமை
Food For Bile
பித்தத்தை குறைக்கும் உணவு முறைகள்:
1. ஆவாரம் பூ கஷாயம் : பித்தத்தை குறைக்க ஆவாரம்பூ கஷாயம் நல்லது இது உடலில் குளிர்ச்சியூட்டும். பித்தம் அதிகரித்தால் முதலில் வரக்கூடிய நோய் சர்க்கரை நோய் தான். இத்தகைய சூழ்நிலையில், ஆவாரம் பூ கசாயம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும், பித்தமும் குறையும்.
2. இஞ்சி மற்றும் தேன் : தேனில் ஊறிய இஞ்சியை சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்து ஆயில் பெருகும். இது தவிர இஞ்சி சாறு, வெங்காயச்சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் பித்தத்தால் ஏற்படும் மயக்கம் நீங்கும்.
Food For Bile
3. மாம்பழத்தின் சாறை லேசாக சூடு படுத்தி அதை குடித்தால் பித்தம் குறையும். அதுபோல எலுமிச்சை சாதத்தை வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டு வந்தாலும் பித்தம் தணியும்.
4. தினமும் விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். அகத்திக்கீரை, பனங்கிழங்கு சாப்பிட்டாலும் பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும்.
5. கமலா ஆரஞ்சு பழம் உடல் உஷ்ணத்தை தணிக்கும். எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அதை குடித்தால் பித்தம் தணியும்.