Non Veg Foods : அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன தெரியுமா?
அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அசைவ உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் பொழுது அஜீரணக் கோளாறுகள் அல்லது செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

பால்
மீன், நண்டு, கருவாடு போன்ற கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது பால், மோர், தயிர் போன்ற பொருட்களை தவிர்த்து விட வேண்டும். இது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாகவே பால் செரிமானத்தை தாமதப்படுத்தும் என்பதால் அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. மாமிச உணவு செரிமானமாக அதிக அமில சுரப்பு தேவைப்படும். பால் பொருட்கள் அமில சுரப்பை நடுநிலையாக்குவதால், செரிமான செயல்முறை மெதுவாக நடக்கும். எனவே அசைவ உணவுகள் செரிப்பதற்கு நேரம் எடுக்கலாம். மீனில் உள்ள புரதங்கள், பாலில் உள்ள புரதங்களுடன் இணைந்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
கீரைகள்
அசைவ உணவுகளை சாப்பிடும் பொழுது கீரை வகைகளை சேர்த்து சாப்பிடுவது சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். சில கசப்பான கீரைகள் உணவின் சுவையை மாற்றி விடக்கூடும். இது உணவை விஷமாக்கி ஃபுட் பாய்சனை ஏற்படுத்தலாம். எனவே அசைவ உணவுகளுடன் கீரை வகைகளை சேர்ப்பதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். கீரைகளில் உள்ள ஆக்சாலிக் அமிலம் இறைச்சியில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்துடன் வினைபுரிந்து அவை உடல் உறிஞ்சுவதை தடுக்கலாம். ஆயுர்வேதத்தின் படி கீரைகள் மற்றும் அசைவ உணவுகள் வெவ்வேறு செரிமான நேரங்களை கொண்டிருப்பதால் அவை செரிமான மண்டலத்தை பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சிட்ரஸ் பழங்கள்
அசைவ உணவுகளுடன் தர்பூசணி போன்ற அதிக நீர் சத்துக் கொண்ட பழங்கள் அல்லது திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை கொண்ட சிட்ரஸ் பழங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் செரிமான நொதிகளை நீர்த்துப்போக செய்து, இறைச்சியின் செரிமானத்தை தாமதப்படுத்தும். அதேபோல் சிட்ரஸ் பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. இவற்றை இறைச்சியுடன் சேர்க்கும் பொழுது இறைச்சியில் உள்ள புரதங்கள் செரிமான நொதிகளின் செயல்பாட்டை தடுக்கலாம். இதனால் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இறைச்சி செரிக்க தேவையான நேரமும், பழங்கள் செரிக்கும் நேரமும் வேறுபடுவதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுகிறது.
தேன்
அசைவ உணவுகள் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேன் இயல்பாகவே சூடான தன்மை உடையது. அசைவ உணவுகளும் உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலில் அதிக உஷ்ணத்தை உருவாக்கலாம். செரிமான அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக காய்ச்சப்பட்ட அல்லது அதிக வெப்பப்படுத்தப்பட்ட தேனை அசைவ உணவுகளுடன் சேர்ப்பது நச்சுத்தன்மையை உருவாக்கலாம் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிக காரமான உணவுகள்
இறைச்சி உணவுகளில் அதிக காரமான மசாலா பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் பொதுவாக கொழுப்புச்சத்து அதிகம் கொண்டவை. இதில் அதிகப்படியான காரம் மற்றும் எண்ணெய் ஆகியவை சேரும் பொழுது செரிமான மண்டலத்திற்கு அதிக சுமை ஏற்படுகிறது. இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். சுவைக்காக மிதமான காரம் சேர்க்கப்படுவது நல்லது. ஆனால் அதிகப்படியான காரம் குடல் மற்றும் வயிறை எரிச்சல் ஊட்டுகிறது.
டீ, காபி
அசைவ உணவுகளை உட்கொண்ட பின்னர் டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள டானின்கள் மற்றும் காஃபின்கள் இறைச்சியில் உள்ள இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கக்கூடும். ஏற்கனவே இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இவை இந்த செரிமான நேரத்தை மேலும் தாமதப்படுத்தலாம் அல்லது செரிமானத்தில் வேறுபாடுகளை உருவாக்கலாம். எனவே அசைவ உணவுகளுக்கு பின்னர் டீ அல்லது காபி குடிப்பதை தவிர்த்து விட வேண்டும்.
மருத்துவ ஆலோசனை தேவை
அசைவ உணவு உண்ட பிறகு வேறு உணவுகளை உண்பதற்கு போதுமான இடைவெளி விட வேண்டும். குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உணவுக்கு முன்னும் பின்னும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அசைவ உணவுகளை முடிந்த அளவு குறைந்த எண்ணையில் சமைக்க வேண்டும். ஒவ்வொருவரின் செரிமான மண்டலமும் உடல் நிலையும் மாறுபடலாம். எனவே உங்களின் உடலின் எதிர்வினைகளை கவனித்து அதற்கு ஏற்ப உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளால் ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.