- Home
- உடல்நலம்
- Energy Boosting Foods : எப்போதுமே சோர்வா இருக்கீங்களா? நீங்க சுறுசுறுப்பாக மாற சூப்பரான உணவுகள்
Energy Boosting Foods : எப்போதுமே சோர்வா இருக்கீங்களா? நீங்க சுறுசுறுப்பாக மாற சூப்பரான உணவுகள்
நீங்கள் எப்போதுமே சோர்வாக இருக்கிறீர்கள் என்றால் , உங்களை சுறுசுறுப்பாக மாற்ற உதவும் சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Energy Boosting Foods
பொதுவாக ஆண்களை விட பெண்கள்தான் அதிக சோர்வை அனுபவிக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் குடும்பம், வீடு, அலுவலகம் என அதிகப்படியான பணி சுமையை அனுபவிக்கிறார்கள். இவற்றின் காரணமாக தான் சில பெண்கள் எப்போதுமே சோர்வாகவே இருக்கிறார்கள். நீங்களும் எப்போதுமே சோர்வாக இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியம். இதற்கு சில உணவுகளை உங்களது உணவில் சேர்க்கு வேண்டும். அவை உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் உடல் சோர்வை குறைக்க உதவும். அவை என்னென்ன உணவுகள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
முழு தானியங்கள் :
முழு தானியங்களில் வைட்டமின் பி நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்குகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
மூலிகை தேநீர் குடியுங்கள் :
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினால் டீ, காபிக்கு பதிலாக பிளாக் டீ, கிரீன் டீ செம்பருத்தி டீ, மேட்சா போன்ற மூலிகை டீக்களை குடிக்கவும். ஏனெனில் இவற்றில் டானிக் இல்ல. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தூக்கமின்மை, மாதவிடாய் பிரச்சினைகளை அதுமட்டுமல்லாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கவும் செய்யும்.
முட்டை :
முட்டை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சோர்வை நீக்கி உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன. எனவே தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடுங்கள்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் :
ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற வைட்டமின் சி நிறைந்துள்ளன. இதுதவிர, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவையும் உள்ளன. எனவே, இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை காலையில் கூட சாப்பிடலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
நீர்ச்சத்து
பொதுவாகவே அதிக பணி சுமை இருக்கும் பெண்கள் தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறார்கள். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் நீரிழிப்பு பிரச்சனை ஏற்படும். இதனால் நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள். எனவே தினமும் தண்ணீர் குடியுங்கள்.