- Home
- உடல்நலம்
- Ilaneer : இளநீரை அப்படியே குடிக்காதீங்க! இதை கலந்து குடித்தால் ஊட்டச்சத்துக்கள் இரட்டிப்பா கிடைக்கும்
Ilaneer : இளநீரை அப்படியே குடிக்காதீங்க! இதை கலந்து குடித்தால் ஊட்டச்சத்துக்கள் இரட்டிப்பா கிடைக்கும்
இளநீர் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பானமாக கருதப்பட்டாலும் அதன் ஊட்டச்சத்து மதிப்பை இரட்டிப்பாக அதில் இந்த 5 பொருட்களை சேருங்கள். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Ingredients To Add To Ilaneer
இளநீர் ஆரோக்கியமான இயற்கை பானமாகும். நீரேற்றத்திற்காக அறியப்படும் இந்த பானத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. உடற்பயிற்சி பிறகு இந்த பானத்தை குடிப்பது நல்லதாக கருதப்படுகிறது. உடலை நச்சு நீக்கவும், சரும ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள்ள வைக்கவும், அசிடிட்டியை போக்கவும் இந்த பானம் உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இளநீரின் ஊட்டச்சத்து மதிப்பை இரட்டிப்பாக்க அதில் இந்த 5 பொருட்களை சேர்க்கவும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சியா விதைகள்
நார்ச்சத்து, ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா 3 சியா விதைகளில் நிறைந்துள்ளன. இவை வயிறை நீண்ட நேரம் நிரப்பி வைப்பது மட்டுமல்லாமல் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ஆற்றலை அதிகரிக்கும். அதேசமயம் இளநீரில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. எனவே இளநீரில் சியா விதைகளை போட்டு குடித்து வந்தால் அது உடலை நீண்ட நேரம் உயிர் ஏற்றமாக வைத்திருக்க பெரிதும்.
தேன்
இளநீரில் தேன் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது. எப்படியெனில் தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், என்சைம்கள் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. அவை தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் தேனியில் இருக்கும் இயற்கையான சர்க்கரையில் உடலில் ஆற்றலை விரைவாக அதிகரிக்க உதவும்.
கருப்பு உப்பு
கருப்பு உப்பில் சோடியம், மினரல்கள் உள்ளன. இது பசியின்மை, வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இளநீருடன் கருப்பு உப்பை சேர்த்து குடித்து வந்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
புதினா
இளநீர் மற்றும் புதினா கலவையானது புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல், உடலை குளிர்ச்சியாக வைக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நச்சு நீக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும். புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இளநீருடன் புதினா சேர்த்து குடிக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாய்வழி ஆரோக்கியமும் மேம்படும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. எலுமிச்சை சாற்றை இளநீரில் கலந்து குடித்தால் உடலில் பி ஹெச் அளவு சமநிலைப்படும், இரத்த ஓட்டம் மேம்படும், உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள் கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் இதில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் மற்றும் இரத்த சோகையை எதிர்த்து போராடும்.