- Home
- Lifestyle
- Coconut Water Benefits: ஜிம் செல்லும் நபருக்கு ஏற்ற சூப்பர் பானம்..! மிஸ் பண்ணாம கண்டிப்பாக குடிக்க வேண்டும்..
Coconut Water Benefits: ஜிம் செல்லும் நபருக்கு ஏற்ற சூப்பர் பானம்..! மிஸ் பண்ணாம கண்டிப்பாக குடிக்க வேண்டும்..
Coconut Water Benefits: தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சியை செய்த பிறகு, இந்த பானம் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வந்து சேரும்.

coconut water
இன்றைய மேற்கத்திய கால கட்டத்தில் உடல் எடையை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்சனையை நம்மில் பலர் எதிர்கொண்டு வருகிறோம் . இதனை கட்டுப்படுத்த நம்மில் பலர் உடற்பயிற்சி செய்கிறோம். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இழந்த தாதுக்கள் உடலில் அப்படியே இருக்கும். அதே நேரத்தில், பெரும்பாலான பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதனால் உடலில் கலோரிகள் அதிகரிக்கும். எனினும், இதற்காக குழப்பமோ கவலையோ கொள்ளத் தேவை இல்லை. ஒரு பானத்தை உட்கொள்வதன் மூலம் உடலின் ஸ்டேமினாவை எளிதாக அதிகரிக்கலாம்.
coconut water
இளநீரில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், அது உங்கள் உடலில் கலோரிகளை அதிகரிக்காது. இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
அதிக ஆற்றல் கிடைக்கும்
இளநீரில் வைட்டமின்கள், உடல் எடையைக் குறைக்கக்கூடிய ஆற்றல் சத்துகள் போன்றவை அதிகமாக இருக்கின்றன. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே காலை வேளையில் உடற்பயிற்சி செய்த பின்னும் இளநீரை உட்கொண்டால், நாள் முழுவதும் உடலில் ஆற்றல் இருக்கும்.
தசைகளில் வரும் பிடிப்புகள் நீங்கும்:
இளநீரில் வைட்டமின் ஏ, எலக்ட்ரோலைட்டுகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மறுபுறம், இளநீர் வைட்டமின் பி மற்றும் ஆண்டியாக்சிடெண்டின் நல்ல மூலமாகும். இதை உட்கொள்வதன் மூலம், உடற்பயிற்சியின் பின்னர் தசைகளில் வரும் பிடிப்புகள் நீங்கும். ஆகையால், நீங்களும் ஜிம் செல்பவராக இருந்தால், தினமும் இளநீரை உட்கொள்ளலாம்.
exacies for women
கலோரிகள் அதிகரிக்காது
உடலில் கலோரிகள் அதிகரிக்காத வண்ணம் ஒரு பானத்தை நீங்கள் குடிக்க விரும்பினால், அதற்கு இளநீர் உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும். இது உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.
நாள் முழுவதும் பசியை உணர மாட்டீர்கள்:
இது காலை உடற் பயிற்சிகள் மற்றும் யோகா செய்ய உங்களுக்கு வலிமை அளிக்கிறது. ஆம், அதிக எடை கொண்டவர்களில் அதிகமாக சாப்பிடும் பிரச்சனை அடிக்கடி காணப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு இளநீர் உட்கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, பசியும் இருக்காது.மேலும், இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.