- Home
- உடல்நலம்
- Bone Health : 50 வயசானாலும் எலும்பு முறியாம சும்மா இரும்பு மாதிரி இருக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க
Bone Health : 50 வயசானாலும் எலும்பு முறியாம சும்மா இரும்பு மாதிரி இருக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க
50 வயதிற்கு பிறகும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இங்கே.

Best Foods For Bone Health After 50
நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எலும்புகளின் பங்கு மிகவும் அவசியம். ஆனால் வயது ஆக ஆக எலும்பு தேய்மானம் அடைந்து விடுகின்றன . குறிப்பாக 50 வயதிற்கு பிறகு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த பிரச்சனைகளை தவிர்க்க நம் அன்றாட உணவில் சாப்பிட வேண்டிய சில உணவுகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பால் மற்றும் பால் பொருட்கள் :
பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் டி கால்சியம் அதிக அளவில் உள்ளன. அவை எலும்புகளை வலுவாக வைக்க பெரிதும் உதவுகின்றன. ஒருவேளை உங்களுக்கு பால் பொருட்கள் பிடிக்காது என்றால் சோயா பால், பாதாம் பால் போன்ற மாற்று வழிகளை தேர்ந்தெடுக்கலாம்.
பச்சை இலை காய்கறிகள் :
பசலைக்கீரை போன்ற பிற பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் கே, மெக்னீசியம், கால்சியம் அதிக அளவில் உள்ளன. அவை எலும்புகளை உறுதியாக வைக்க தேவையான அனைத்து இருப்பதால் 50 கடந்தவர்கள் கண்டிப்பாக தினமும் இவற்றை சாப்பிடுவது நல்லது.
ப்ரோக்கோலி (Broccoli) :
பிரக்கோலி எலும்பை வலுவாக்க உதவும் ஒரு சூப்பர் ஃபுட் காயாகும். இதில் வைட்டமின் கே, போலேட் போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. மேலும் இது பலவித ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும்.
விதைகள் மற்றும் கொட்டைகள் :
வால்நட், பாதாம், சியா விதைகள் போன்ற உலர் பழங்கள் மற்றும் விதைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் அதிகமாகவே உள்ளதால் இவற்றை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும்.
மீன்
சால்மன், ட்ரவுட், மத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி அதிக அளவில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை இவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
எனவே 50 வயதை கடந்தவர்கள் மேலே சொன்ன உணவுகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்தால் எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரவே வராது. முக்கியமாக உங்களது எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.