- Home
- உடல்நலம்
- Men's Health : ஆண்களே! 30 வயசுக்கு அப்பறம் 'இதை' கட்டாயம் செய்ங்க!! ஆரோக்கியத்திற்கு 5 பழக்கங்கள்
Men's Health : ஆண்களே! 30 வயசுக்கு அப்பறம் 'இதை' கட்டாயம் செய்ங்க!! ஆரோக்கியத்திற்கு 5 பழக்கங்கள்
உயிர்சக்தி தொடங்கி உ உடல் ஆரோக்கியம் வரை 30 வயதுக்கு மேல் ஆண்கள் பின்பற்ற வேண்டிய 5 ஆரோக்கியமான பழக்கங்களை இங்கு காணலாம்.

30 வயதிற்கு மேல் ஆண்கள் பின்பற்ற வேண்டிய 5 ஆரோக்கியமான பழக்கங்கள்
சில சின்ன மாற்றங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம். மனது, ஆன்மா சமநிலையை மேம்படுத்த குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஆரோக்கியத்திற்கு சில விஷயங்களை செய்ய வேண்டும். ஆண்கள் வேலைப்பளு, பொருளாதார சிக்கல், குடும்ப பிரச்சனைகளில் மூழ்கி உடல் நலத்தை பேணாமல் விடுவார்கள். அது தவறு. 30 வயதிற்கு மேல் ஆண்கள் பின்பற்ற வேண்டிய 5 ஆரோக்கியமான பழக்கங்களை இங்கு காணலாம்.
யோகா;
யோகா சுவாச பயிற்சிகள் மட்டுமல்ல; உடலின் நீட்சியையும் மேம்படுத்தக் கூடியது. சில ஆண்களின் உடல் கடினமானதாக இருக்கும். ஆரம்பகால யோகா கடினமாக தெரியும். ஆனால் தொடர்ந்து செய்யும்போது உடலை வலுவாக வைப்பதோடு சுறுசுறுப்பாகவும் வைக்க ஏற்ற பயிற்சியாகும். 30 வயதுகளுக்கு பின் ஏற்படும் இறுக்கமான தசைகள், விறைப்பான மூட்டுகள் மோசமான தோரணை ஆகியவற்றை தடுக்க யோகா உதவும். சுவாசப்பயிற்சி சுவாசம், நரம்பு மண்டலத்தை சீராக்க உதவும். இரத்த அழுத்தம், பதட்டம், தூக்கம் ஆகியவை குறையும்.
பயிற்சி:
எடை தூக்குதல், எதிர்ப்பு பட்டைகள் வைத்து பயிற்சி செய்தல், கிளாசிக் புஷ்-அப்கள், ஸ்குவாட் எனும் குந்துகைகள் செய்வது தசைகளை வலுவாக வைக்கும். வளர்சிதை மாற்றம் அதிகரிக்க, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த வலிமை பயிற்சிகள் செய்ய வேண்டும்.
மூளைக்கு பயிற்சி
நினைவாற்றல், அறிவாற்றல் ஆரோக்கியம், மறதி, மூளை மூடுபனி, கவனம் ஆகியவை மேம்படும். தினமும் புதிரை சரி செய்யுங்கள். புதிய புத்தகத்தைப் படியுங்கள். ஏதேனும் மொழியைக் கற்றுக்கொள்ளலாம். தியானம், நன்றியுணர்வு போன்றவை செய்யலாம்.
உணவு பழக்கம்
வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். வயதுகள் 30லிருந்து 40கள் வரும்போது காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், மெலிந்த இறைச்சிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை உண்ண வேண்டும். நல்ல உணவு பழக்கம் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், மூளை செயல்பாடு, இதய ஆரோக்கியம் போன்றவை மேம்படும்.
தூக்கம்
நல்ல தூக்கம் அவசியம். தினமும் சரியான நேரத்திற்கு படுப்பதை வழக்கப்படுத்துங்கள். மன உறுதி அடைந்து மன அழுத்தம் குறைய தூக்கம் முக்கியம். நல்ல தூக்கம் எடை மேலாண்மைக்கு உதவும். நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும்.