- Home
- உடல்நலம்
- Home Remedies : இனி காய்ச்சலுக்கு பாராசிட்டாமல் வேண்டாம்!! வீட்டு பொருளில் செய்யும் இயற்கை காய்ச்சல் விரட்டி
Home Remedies : இனி காய்ச்சலுக்கு பாராசிட்டாமல் வேண்டாம்!! வீட்டு பொருளில் செய்யும் இயற்கை காய்ச்சல் விரட்டி
காய்ச்சலை விரட்ட உதவும் எளிய மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Home Remedies for Fever
காய்ச்சல் வந்தாலே பலரும் தேடுவது பாராசிட்டமல் தான். ஆனால் காய்ச்சல் பெரும்பாலும் வைரஸ் தொற்று காரணமாக வருவதால் பாரசிட்டமல் போட தேவையில்லை. அதற்கு பதிலாக, சில இயற்கை வைத்தியங்கள் மூலம் காய்ச்சலை குணமக்கிவிடலாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துளசி கசாயம்
துளசி இலைகள், சிறிதளவு வெல்லம், கருப்பு மிளகு, இஞ்சி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த துளசி கசாயம் சளி, இருமலை குணமாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் பால்
ஒரு கிளாஸ் சூடான பாலுடன் மஞ்சள் கலந்து குடியுங்கள். மஞ்சளில் குர்குமின் என்ற அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளதால் அது இருமல், தொண்டை வலி, உடல் வலிகளை தணிக்கும். ஆயுர்வேத வைத்தியங்களில் இது மிகவும் பிரபலமானது.
அதிமதுரம் டீ
அதிமதுரம் வேறு கொண்டு தயாரிக்கப்படும் இந்த டீயானது இருமலை குறைக்கும், தொண்டைவலியை குணமாக்கி தொண்டையில் ஈரப்பதத்தையும் பாதுகாக்கும்.
இஞ்சி மற்றும் தேன் :
புதிய இஞ்சியை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் குணமாகும். தொற்று நோய்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும்.
ஓமம் நீராவி
ஓம விதைகளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பிறகு நீராவி பிடித்தால் சுவாச பாதை திறக்கும், தலைவலி குணமாகும், மார்பு சளி குறையும்.
ரசம்
இது தென்னிந்தியா பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். பூண்டு, கருப்பு மிளகு, கருவேப்பிலை, புளி கொண்டு தயாரிக்கப்படும் ரசமானது காய்ச்சலின் போது கொடுப்பது ரொம்பவே நல்லது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது மட்டுமில்லாமல், இது செரிமானத்தை மேம்படுத்தும் சூப்பர் ஃபுட் ஆகும்.