- Home
- உடல்நலம்
- Weight Increase : சாப்பிட்ட பின் செய்யுற இந்த பழக்கம்.. உடல் எடையை உடனடியா அதிகரிக்கும்!!
Weight Increase : சாப்பிட்ட பின் செய்யுற இந்த பழக்கம்.. உடல் எடையை உடனடியா அதிகரிக்கும்!!
உணவு சாப்பிட்டதும் நாம் செய்யும் ஒரு பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. அதை குறித்து இங்கு சுருக்கமாக காணலாம்.

சாப்பிடும்போது நாம் செய்கிற பழக்கங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக எடையை குறைக்க நினைப்பவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்படி பார்க்கும்போது சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது எடையை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. நம்மில் பலருக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது.
சாப்பிட்டதும் ஒரு மிடறு தண்ணீர் அருந்துவதில் சிக்கல் இல்லை. ஆனால் சிலர் சாப்பிட்டதும் நிறைய தண்ணீர் குடிப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. உண்மையில் எப்போது தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை குறித்து பலருக்குத் தெளிவாகத் தெரியாது. இந்தப் பதிவில் சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதால் என்னாகும் என்பதைக் காணலாம்.
சாப்பிட்ட உடனே அதிகமான அளவில் தண்ணீர் குடிக்கக் கூடாது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் செரிமானம் நன்றாக நடைபெறாது. உணவுக்கு பின் உடனடியாக தண்ணீர் குடிப்பது மோசமான பழக்கம்தான். நீங்கள் சாப்பிடும் போது கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம். சாப்பிடும் முன் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம். இதனால் குறைவாக சாப்பிட முடியும். செரிமானம் நன்றாக இருக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் குறைக்க முடியும்.
ஏற்கனவே செரிமானப் பிரச்சினைகள், இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய்கள் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட்ட பின் அதிக தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டதும் 10 நிமிடங்கள் குறுநடை போடுவது செரிமானத்தை மேம்படுத்தும். எடை குறைய உதவும்.
பொதுவாக எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். அதிகம் சாப்பிடமாட்டீர்கள். ஆனால் சாப்பிட்ட பின் அதிகம் தண்ணீர் குடித்தால் எடையைக் குறைவதற்கு பதிலாக அதிகமாகிவிடும்.

