MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Diabetes : மழை கால சேற்றுப் புண்; சுகர் நோயாளிகள் 'இதை' செய்ய மறக்காதீங்க!!

Diabetes : மழை கால சேற்றுப் புண்; சுகர் நோயாளிகள் 'இதை' செய்ய மறக்காதீங்க!!

மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு பாத தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jul 03 2025, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மழைய காலத்தில் சர்க்கரை நோயாளிகள்
Image Credit : google

மழைய காலத்தில் சர்க்கரை நோயாளிகள்

மழைக்காலம் ஆரம்பமாகப் போகிறது. இந்த சீசனில் அடிக்கடி வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் உடலில் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதுவும் குறிப்பாக மழைக்காலம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சவாலானதாகவே இருக்கும். ஏனெனில் இந்த சீசனில் தான் சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவில் ஏற்றம் இறக்கம் ஏற்படும். மேலும் கால்களில் காயம் ஏற்பட்டால் புண்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளன.

இது தவிர சிறுநீர் பிரச்சனை, சரும பிரச்சனை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். எனவே மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவு குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு சிறிய அவற்றின் கூட பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

25
மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் பிரச்சினைகள் :
Image Credit : Getty

மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் பிரச்சினைகள் :

- நிபுணர்களின் கூற்றுப்படி, மழைக்காலம் சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மழைகாலத்தின் ஈரப்பதமான வளிமண்டலத்தின் காரணமாக பூஞ்சை மற்றும் நுண்ணுயிரிகள் மிக வேகமாக வளரும். இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தொற்று நோய்க்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.

- அதுமட்டுமில்லாமல் அவர்களது பாதங்களில் காயங்கள் இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் காயங்கள் தொற்று நோயாக மாறி இருதில் நரம்பு தொடர்பான பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

- அதைத் தவிர, மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் தொற்றுகள், கால் புண்கள், சிறுநீர் பாதை தொற்றுகள், செரிமான நோய் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Related Articles

Related image1
Banana For Diabetes : சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
Related image2
Diabetes: சர்க்கரை நோயாளிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?
35
இதில் கவனம் :
Image Credit : Getty

இதில் கவனம் :

மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் தங்களது ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். அதுபோல மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடவே உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் புதிய, பழங்கள் காய்கறிகள் உட்பட்ட புரதம், நாச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவது வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

45
பாதங்களைக் குறித்து கவனம் தேவை!
Image Credit : Getty

பாதங்களைக் குறித்து கவனம் தேவை!

- சர்க்கரை நோயாளிகள் மழைக்காலத்தில் வெறும் காலுடன் நடப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

- கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்.

- வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் உடனே கால்களை சுத்தம் செய்யுங்கள்.

- கால் விரல்களில் இருக்கும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நகங்களில் தொற்றிய ஏதேனும் ஏற்பட்டலாம்.

- பாதத்தில் புண்கள் வராமல் தடுக்க நல்ல தரமான மற்றும் வசதியான காலணிகளை அணியுங்கள்.

- மழைக்காலத்தில் பாதத்தில் தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளதால் கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவி உடனே ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி விடுங்கள். பாதம் நன்றாக காய்ந்த பிறகு சாக்ஸ் அணிய வேண்டும்.

55
முக்கிய குறிப்பு :
Image Credit : Getty

முக்கிய குறிப்பு :

- மழைக்காலத்தில் உடலில் நீரிழிப்பு ஏற்படுவதை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஆரோக்கியமான பானங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இது உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.

- சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நீரிழிவு பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

- மழைகாலத்தில் தினமும் பாதங்களை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் பாதங்களில் ரத்த ஓட்டம் நன்றாக இல்லையென்றால் தோலில் மாற்றங்கள் ஏற்படும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Related Stories
Recommended image1
Banana For Diabetes : சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
Recommended image2
Diabetes: சர்க்கரை நோயாளிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved