- Home
- உடல்நலம்
- Eye Health : வயசானாலும் கண் பார்வை ஷார்ப்பா இருக்கனுமா? இந்த 5 பழக்கங்கள உடனே நிறுத்துங்க!
Eye Health : வயசானாலும் கண் பார்வை ஷார்ப்பா இருக்கனுமா? இந்த 5 பழக்கங்கள உடனே நிறுத்துங்க!
நாம் நாம் செய்யும் சில தவறுகள் கண் பார்வையை பாதிக்கும். அவை என்னென்ன என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்

Habits That Damage Eyesight
கண்கள் தான் நம் உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். பார்த்தல், படித்தல் என பல வேலைகளுக்கு கண்கள் தான் உதவுகின்றது. ஆனால் நாமோ இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கண்ணுக்கு வலி, அசெளகரியம் ஏற்படும் போது தான் அது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், நாம் செய்யும் சில பழக்கங்கள் கண்களை மோசமாக பாதிக்கும். அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, செய்வதை நிறுத்தினால் கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம். இந்த பதிவில் கண் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்பாடு :
இன்றைய நவீன உலகில் செல்போன் கணினி பயன்பாடு அதிகமாக இருக்கிறது. நீண்ட நேரம் இவற்றை பார்த்தால் நீண்ட கால கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இவை தலைவலி, மங்கலான பார்வை, கண்களில் வறட்சி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதுபோல அவற்றிலிருந்து வரும் நீல ஒளி தூக்கத்தை பாதிக்கும். எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க 20-20-20 என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும். இதற்கு ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கண்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் மற்றும் கண் அழுத்தம் ஏற்படுவதும் குறையும்.
சன் கிளாஸ் போடாமல் வெளியே செல்வது :
சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்முடைய சருமத்திற்கு மட்டுமல்ல கண்களையும் மோசமாக பாதிக்கும். இது கண் புரை, கண் புற்றுநோய் வருவதற்கு வழி வகுக்கும். எனவே நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக சன் கிளாஸ் அணியுங்கள்.
கண்களை அதிகமாக தேய்ப்பது :
நீண்ட நேரம் செல்போன் கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும். இதனால் நம்மை அறியாமலேயே நாம் கண்களை அடிக்கடி தேய்த்து விடுகிறோம். இப்படி செய்வது கண்களை மேலும் பாதிக்கும். அதாவது கண்களை அதிகமாக தேய்க்கும் போது இரத்த நாளங்கள் சேதமடையும். இதனால் கருவளையங்கள் போன்றவை ஏற்படும். இதுதவிர, கண்களை தேக்கும் போது கைகள் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் தொற்றுகள் கண்களை பாதிக்கும்.
தூக்கமின்மை :
நாம் சரியாக தூங்கவில்லை என்றால் நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கிய மட்டுமல்ல, கண் ஆரோக்கியமும் மோசமாக பாதிப்படையும் தெரியுமா? ஆம் தூக்கமின்மை மங்களப் பார்வை, கண்களில் வறட்சி, ஒளியின் உணர்திறன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது நீடித்தால் தீவிர கண் நோய்க்கு வழிவகுக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் ஆவது கண்டிப்பாக தூங்குங்கள்.
கண் பரிசோதனை :
நம்மில் பலர் வழக்கமான கண் பரிசோதனை செய்வதை தவிர்த்து விடுகின்றனர். கண் பாதிக்கப்பட்ட பிறகு தான் மருத்துவரை நோக்கி ஓடுகின்றனர். உங்களது கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனால் பல கண் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.