Eye Health : உங்க கண் 'இப்படி' இருக்கா? கண்கள் காட்டிக் கொடுக்கும் 5 நோய்கள்!!
கண்களின் தோற்றத்தை வைத்தே உடலில் உள்ள சில நோய்களை கண்டறிய முடியும். ஆரோக்கியமான கண்களின் எந்த மாற்றமும் இருப்பதில்லை.

Eye Health
கண்கள் சில நோய்களை வெளிப்படுத்தக்கூடியவை. உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக திகழு. கண்கள் ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகவும் உள்ளன. கண்களில் சில மாற்றங்கள் வந்தால் அவை பார்வை குறைபாடு அல்ல. ஊட்டச்சத்து குறைபாடுகள், வாழ்க்கை முறை மாற்றம், மூளை பிரச்சினையாக கூட இருக்கலாம். அதை எவ்வாறு கண்டறியலாம் என இங்கு காணலாம்.
இரத்த சோகை:
இரத்தக் கோளாறுகள், இரத்தசோகை இருந்தாலும் கண்களில் அறிகுறிகள் தெரியும். வெளிர் நிறத்தில் கண் இமைகளின் உட்பக்கம் இருக்கும் அல்லது விழித்திரையில் காணப்படும் அசாரணமான இரத்த நாள வடிவங்களை கவனம் கொள்ள வேண்டும். இவை குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கையை குறிக்கலாம். திடீரென கண்கள் வெளிர் அல்லது மஞ்சள் நிறமாக மாறினால் மருத்துவரை அணுகுங்கள். சிலருக்கு சிவப்பு அல்லது வீக்கமடைந்த கண்கள் அறிகுறியாக இருக்கலாம்.
நீரிழிவு நோய்
நம்முடைய உடலில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாவிட்டால் விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் சேதமடையும். இவைதான் கண்ணின் பின்பக்கமுள்ள ஒளி உணர்திறன் அடுக்கு ஆகும். இந்த நிலையஇ நீரிழிவு ரெட்டினோபதி என்கிறார்கள். இந்தப் பாதிப்பு வந்தால் வண்ணங்கள் சரியாக தெரியாது. மங்கலான பார்வை, கரும்புள்ளிகள், ஏற்ற இறக்கமான பார்வை, நீண்டகாலமாக பார்வை குறைபாடு வரலாம்.
உயர் இரத்த அழுத்தம்
கண்களில் உள்ள இரத்த நாளங்கள் மாற்றம் அடைவது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறி. பிபி அதிகமாகும்போது இரத்த நாளங்கள் மாற்றமடைவதை உயர் ரத்த அழுத்த ரெட்டினோபதி என்கிறார்கள். இதனால் பார்வை குறைபாடு வரலாம். இதயம், சிறுநீரகங்கள் ஆகிய உள்ளுறுப்புகளுக்கும் பாதிப்பு வரக்கூடிய அறிகுறியாகும்.
கண் அழுத்த நோய் (Glaucoma)
கண்ணுக்குள் அதிக அழுத்தம் ஏற்பட்டால் பார்வை நரம்பு சேதமாகும். இது நாளடைவில் புறப்பார்வை இழப்பை உண்டாக்கும். இதை கண் அழுத்த நோய் (Glaucoma) என்கிறார்கள். சரியான நேரத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் முற்றிலும் பார்வை இழப்பு ஏற்படலாம். இது மீளக்கூடிய நோய் அல்ல. ஆனால் தீவிரமடையாமல் தடுக்கலாம். இந்த நோய் வந்தால் பக்க பார்வை இழப்பு வரும். நீங்கள் விளக்குகளைப் பார்க்கும்போது அதனைச் சுற்றி ஒளிவட்டங்கள் தெரியும். சில நேரங்களில் கண் வலி அல்லது சிவத்தல் போன்ற அறிகுறிகள் ஆபத்தானவையாக இருக்கும்.
கண் எரிச்சல்
சிலருக்கு திடீரென கண் எரிச்சல் வரலாம். அது உடல் சூட்டின் அறிகுறியாக இருக்கலாம். தலைக்கு எண்ணெய் வைக்காமல், குளிக்காமல், போதிய உறக்கம் இல்லாமல் காணப்படுவருக்கு இந்த அறிகுறிகள் வரலாம். இதைத் தடுக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். வெந்தயத்தை ஊறவிட்டு அரைத்து தலை முடி வேர்க் கால்கள் வரை தடவி 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்க வேண்டும். இதனால் கண் எரிச்சல், உடல் சூடு நீங்கும். முடியும் வளரும்.