Herbal Teas : இஞ்சி டீ தான தெரியும்! ஆனா இந்த '3' 'டீ வகைகள் தான் மழைக்காலத்துல பெஸ்ட்
மழைகாலத்தில் செரிமானத்தை தூண்டும் டீ வகைகளை இந்தப் பதிவில் காணலாம்.

Best Herbal Teas For Monsoon
மழைக்காலத்தில் செரிமான மண்டலம் மந்தமாக செயல்படும். அதிகமான ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை போன்றவை செரிமான அமைப்பில் மந்த உணர்வை ஏற்படுத்தி உணவு செரிப்பதை கடினமாக்கும். இந்த நேரத்தில் செரிமானத்தை தூண்டும் உணவு பழக்கத்திற்கு மாற வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் செரிமானத்திற்கு உதவக்கூடிய நான்கு டீ வகைகளை குறித்து காணலாம்.
கொத்தமல்லி டீ
கொத்தமல்லி விதைகள் உடலின் செரிமான அமைப்பான கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்று வீக்கம், உடல் சோர்வு போன்றவற்றை நீக்க கொத்தமல்லி டீ அருந்தலாம்.
சீரக டீ
150 மிலி தண்ணீரில் சீரகத்தை போட்டு 100 மிலி ஆக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடிப்பது செரிமானத்திற்கு நல்லது. உணவில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. வயிற்று வீக்கம் குறையவும், எண்ணெய் உணவுகளுக்கு பின் செரிமானத்தை மேம்படுத்தவும் சீரக டீ ஏற்றது.
இஞ்சி டீ
இஞ்சி டீ எல்லோருக்கும் பிடித்தமானது. இது உமிழ்நீர், பித்தம், இரைப்பை நொதிகளைத் தூண்டக் கூடியது. இதனால் செரிமான கோளாறுகள் நீங்கும். செரிமான பிரச்சனையால் ஏற்படும் வீக்கம், குமட்டல், பிடிப்புகள் நீங்கவும் உதவுகிறது. இதன் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய தொற்றுகளிலிருந்து குடலைப் பாதுகாக்கும்.
பெருஞ்சீரக டீ
பெருஞ்சீரகத்தை எடுத்து கொள்வது செரிமான சுரப்பிகளை தூண்டும். வாயுவை விடுவிக்க உதவும். இந்த டீயை செரிக்க கடினமான உணவுகள், எண்ணெய் நிறைந்த உணவுகளுக்குப் பின் குடிக்கலாம். இஞ்சி குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். குடல் செயல்பாட்டை மேம்படுத்தும்.