- Home
- உடல்நலம்
- Tea Side Effects : டீ பிரியர்களே! அதிகமா டீ குடித்தால் ஆபத்தா? டீ குறித்து பலர் அறியா தகவல்கள்
Tea Side Effects : டீ பிரியர்களே! அதிகமா டீ குடித்தால் ஆபத்தா? டீ குறித்து பலர் அறியா தகவல்கள்
அதிகமாக டீ அருந்தும் பழக்கம் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

Tea Side Effects on Health
காலை முதல் இரவு வரை டீ குடித்தே வாழ்பவர்கள் ஏராளம். ஒருவர் தன் வாழ்நாளில் அதிகமாக டீ குடிப்பதால் இரும்புச்சத்து குறையும். சிலருக்கு தூக்க சுழற்சி மாறுபடும். தலைவலி, இரத்த அழுத்தம் ஆகியவை அதிகரிக்கிறது. இந்தப் பதிவில் டீ சார்ந்த பல சுவாரசிய தகவல்களை காணலாம்.
பிளாக் டீ
பிளாக் டீ என சொல்லப்படும் பால் கலக்காத 1 கப் டீயில் சுமார் 40 முதல் 60 மி.கி காஃபின் இருக்கும். இதுவே ஒரு நாளில் 400 மி.கி.யைத் தாண்டிச் சென்றால் இதயத்தை பாதிக்கும். அதாவது ஒருவர் 10 கப் டீ குடித்தால் அவருடைய இதயம் பாதிக்கப்படுகிறது. கைகள் நடுங்கும். தூக்கம் வராது.
செரிமான கோளாறுகள்:
டீயில் உள்ள டானிக் அமிலம் வயிற்று திசுக்களை பாதிக்கும். அதிகமான டீ குடித்தால் அது நெஞ்செரிச்சல் அல்லது குமட்டல் வர காரணமாகும். ஏற்கனவே அமில ரிஃப்ளக்ஸ் இருந்தால் பால் சேர்த்து அருந்தலாம்.
தலை வலி
அதிகளவு காஃபின் கலந்த டீ குடிப்பவர்களுக்கு தலைவலி வரலாம். ஒரு நாளில் 700 மி.கி+ வரை டீயில் காஃபின் இருந்தால் அது நிலையான இரத்த நாள சுருக்கத்தை உண்டாக்கலாம். இது நாள்பட்ட பதற்றம், தலைவலியை வரவழைக்கும். உருவாக்கக்கூடும்.
கருச்சிதைவு
அதிகமான காஃபின் குடிப்பது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். சில பெண்களுக்கு கருச்சிதைவுடன் தொடர்புடையது. கர்ப்பக் காலத்தில் டீயை தவிர்க்கலாம். ராஸ்பெர்ரி இலை, பெப்பர்மிண்ட் அல்லது இஞ்சி ஆகியவற்றிலிருந்து செய்யும் மூலிகை தேநீர் அருந்தலாம்.
எலும்பு ஆரோக்கியம்
அதிகப்படியான டீ கால்சியம் குறைப்பாட்டை ஏற்படுத்தும். அதிகன் டீ குடித்தால் சிறுநீர் வழியாக கால்சியம் விரைவில் வெளியேறும். இதனால் நீண்ட கால எலும்பு முறிவு ஆபத்து அதிகமாகலாம்.
மோசமான விளைவு
அதிகம் டீ குடித்தால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே உணர்திறன் அதிகம் கொண்ட இதயங்களில் படபடப்பு அதிகமாகும். அளவாக குடித்தால் பிரச்சனை இல்லை.
தினமும் எத்தனை முறை டீ குடிக்கலாம்?
400 மில்லிக்கு கீழாக தான் டீ குடிக்க வேண்டும். அது 3 அல்லது 4 கப் வரை இருக்கலாம். அதற்கு மேல் குடிக்கக் கூடாது.
டீ குடிக்க சரியான நேரம்?
டீ உணவுக்கு முன் குடிக்கலாம். அதாவது சாப்பிடும் 30 நிமிடங்களுக்கு முன் குடிக்கலாம்.