- Home
- உடல்நலம்
- Kidney Health : வெறும் தண்ணீயா? கிட்னி ஆரோக்கியத்துக்கு இந்த '6' பானங்கள் ரொம்ப முக்கியம்!!
Kidney Health : வெறும் தண்ணீயா? கிட்னி ஆரோக்கியத்துக்கு இந்த '6' பானங்கள் ரொம்ப முக்கியம்!!
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தண்ணீர் தவிர என்னென்ன பானங்கள் அருந்த வேண்டும் என இங்கு காணலாம்.

Best Drinks for Kidney Health
இன்றைய காலகட்டத்தில் சரியாக தண்ணீர் குடிக்காமல் பலருக்கும் சிறுநீரகப் பிரச்சனை. சிறுநீரகத்தில் கற்கள் போன்றவை வருகின்றன. சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைக்க தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஆனால் சிறுநீரகங்களுக்கு நன்மை செய்யக் கூடிய சில பானங்களும் இருக்கின்றன. இவை சிறுநீரகங்களில் கல் போன்ற நச்சுக்கள் தேங்காமல் வடிகட்டும் அற்புத பானமாகும். இந்த பானங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்யும். உடலில் தாதுக்களை சமநிலையில் வைக்க உதவுகின்றன. இரத்த அழுத்த கட்டுப்பாடு, இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்ட உதவுகின்றன. இந்தப் பதிவில் சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய்க்களை தடுக்க உதவும் பானங்களை காணலாம்.
லெமன் ஜூஸ்
லெமன் ஜூஸ் உடலை புத்துணர்வாக வைப்பதோடு சிட்ரிக் அமிலத்தையும் உடலுக்கு தருகிறது. இந்த அமிலம் சிறுநீரில் காணப்படும் மற்ற தாதுக்களுடன் கால்சியம் இணைவதைத் தடுத்து சிறுநீரக கற்கள் வராமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது.
பால், பால் பொருள்கள் எடுக்கலாமா?
பாலில் கால்சியமும், புரதமும் உள்ளது. இவை உடலுக்கு அத்தியாவசியம். ஆனால் பாலில் உள்ள பாஸ்பரஸும், பொட்டாசியமும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டியவை. ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகளுக்காக உணவில் தனிக்கவனம் என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடிக்கலாம். ஆரோக்கியமானவர்கள் அளவாக பால் குடித்தால் பிரச்சனை இல்லை. அளவுக்கு மீறினால் நல்லதல்ல. பொட்டாசியம் அல்லது பாஸ்பரஸின் விளைவுகளை பொறுத்தவரை பசும்பாலை தவிர்க்க வேண்டும். சர்க்கரை இல்லாத பாதாம், ஓட்ஸ் அல்லது தேங்காய் பால் அருந்தலாம்.
மூலிகை டீ
மூலிகை டீ வகைகளான புதினா, கெமோமில், இஞ்சி, செம்பருத்தி ஆகியவை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள், மிதமான டையூரிடிக் விளைவுகள் இருப்பதால் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கிரீன் டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பி கற்கள் வரும் ஆபத்தைக் குறைக்கிறது. இந்த டீ சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கும்.
மாதுளை
இந்த பழச்சாற்றில் பாலிபினால்கள் என்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கத்தைக் குறைக்கும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மாதுளை சாறு நாள்பட்ட சிறுநீரக நோயின் தாக்கத்தையும், அதன் வளர்ச்சியையும் தாமதிக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் இதில் உள்ள இயற்கை சர்க்கரை காரணமாக அளவாக உண்ண வேண்டும்.
மூலிகை தண்ணீர்
பழங்கள் அல்லது ஏதேனும் மூலிகைகள், புதினா, வெள்ளரி அல்லது பெர்ரி ஆகியவற்றில் ஏதேனும் தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளலாம். இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிகள், வெள்ளரி, புதினா ஆகியவை தண்ணீரில் போட்டு குடித்தால் சிறுநீரகத்திற்கு நன்மை செய்யக் கூடியவை.
தர்பூசணி
தர்பூசணியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது. இது சிறுநீரக நச்சுகள், அதிகப்படியான உப்புகளை வெளியேற்றுகிறது. இதில் காணப்படும் லைகோபீன், ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தைக் குறைக்கும்.