முள்ளங்கி ஜூஸ் 'இப்படி' குடிச்சா தான் எடை குறையும்; பலரும் அறியாத தகவல்!
Radish Juice For Weight Loss : முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் எடையை சுலபமாக குறைத்துவிடலாம்.

முள்ளங்கி ஜூஸ் 'இப்படி' குடிச்சா தான் எடை குறையும்; பலரும் அறியாத தகவல்!
இன்றைய காலகட்டத்தில் எடை அதிகரிப்பது என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. எடை அதிகரிப்பால் குறிப்பாக பெண்கள் பிடித்த ஆடைகளை கூட அணிய முடியாமல் போகின்றது. மேலும் எடை அதிகரிப்பால் பல வகையான உடல்நல பிரச்சனைகளும் உருவாகத் தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில், எடையை கட்டுப்படுத்துவது ரொம்பவே முக்கியம். இதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போன்ற பல வழிகளில் எடையை குறைக்கலாம். இந்த முறையே பலரும் பின்பற்றுகின்றனர். இந்த லிஸ்டில் இப்போது உடல் எடையை குறைக்க முள்ளங்கி ஜூஸ் குடிப்பது நல்லது.
எடையை குறைக்க முள்ளங்கி ஜூஸ்:
முள்ளங்கியில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவுகின்றன. எனவே, இதற்கு நீங்கள் தினமும் ஒரு கிளாஸ் முள்ளங்கி ஜூஸ் குடிக்கலாம்.
இதையும் படிங்க: இந்த '5' பிரச்சினை உள்ளவர்கள் முள்ளங்கியை தவறுதலாக கூட சாப்பிடக்கூடாதாம்! ஏன் தெரியுமா?
எடையை குறைக்க முள்ளங்கி ஜூஸ் எப்படி உதவுகிறது?
1. முள்ளங்கியில் இருக்கும் இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்று ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரல் மற்றும் சிறுநீர ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.
2. தினமும் ஒரு கிளாஸ் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும். அதுமட்டுமின்றி உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதையும் இது தடுக்கும்.
3. முள்ளங்கியில் இருக்கும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.
4. உலகில் குறைந்த அளவு கல்லூரிகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இது எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
5. முள்ளங்கியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பது மட்டுமல்ல, சருமத்தையும் பளபளப்பாக வைக்க உதவும்.
முள்ளங்கி ஜூஸ் எப்படி செய்வது?
முதலில் முள்ளங்கியை தோல் சீவி சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளுங்கள். அதுபோல ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் முள்ளங்கி மற்றும் இனிப்புக்காக ஆப்பிளின் ஒரு துண்டை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் முள்ளங்கி ஜூஸ் தயார்!
இதையும் படிங்க: படுத்தி எடுக்கும் யூரிக் அமிலம்: முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க.. ஈசியா குறைச்சிடலாம்!