- Home
- உடல்நலம்
- படுத்தி எடுக்கும் யூரிக் அமிலம்: முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க.. ஈசியா குறைச்சிடலாம்!
படுத்தி எடுக்கும் யூரிக் அமிலம்: முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க.. ஈசியா குறைச்சிடலாம்!
Radish For Uric Acid Control : யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் முள்ளங்கியை தங்களது உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கியை அதன் விலைகளுடன் அல்லது பச்சையாகவே கூட சாப்பிடலாம்.

படுத்தி எடுக்கும் யூரிக் அமிலம்: முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க.. ஈசியா குறைச்சிடலாம்!
யூரிக் அமிலம் என்பது நம் அனைவரின் உடலிலும் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சாகும். இது சிறுநீரகங்களால் எளிதில் வடிகட்டப்பட்டு உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் அது ஆபத்து. பொதுவாக யூரிக் அமிலம் அதிகமானால் அது மூட்டுகளுக்கு தான் மோசமான தீங்கு விளைவிக்கும். இதனால் மூட்டுகளில் வீக்கம், விறைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலியை நாம் சந்திக்க நேரிடும்.
உடலில் யூரிக் அமிலம் எப்படி அதிகரிக்கின்றது?
உண்மையில், யூரிக் அமிலமானது பியூரின் நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடுவதால் தான் ஏற்படுகின்றது. பியூரின் என்பது ஒருவிதமான கரிம சேர்மமாகும். இது சிறுநீரகங்களால் எளிதில் வடிகட்டப்பட்டு, சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்றது. ஒருவேளை சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ அல்லது சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்பட்டால் அவை நம்முடைய உடலில் இருந்து வெளியேற முடியாமல் உடலிலேயே அப்படியே இருந்துவிடும். மேலும் அவை உடலில் அதிகமாகி, மூட்டுகளில் குவியத் தொடங்கும். இதன் காரணமாக தான் மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்படுகின்றது. சில சமயங்களில் இதனால் பாதிக்கப்பட்ட நபரால் நடக்கவோ, உட்காரவோ எழவோ அல்லது நிற்கவோ முடியாமல் போகின்றது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் தான் கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
இதையும் படிங்க: நீங்கள் செய்யும் இந்த தவறால் தான் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம்..! அவை...
யூரிக் அமில அளவை குறைப்பது எப்படி?
ஆனால் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் யூரிக் அமிலத்தை எளிதாக குறைத்துவிடலாம் தெரியுமா? அவற்றில் ஒன்றுதான் முள்ளங்கி. ஆம், முள்ளங்கி சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தை இயற்கை முறையில் குறைத்து விடலாம். அதுவும் குறிப்பாக, இந்த குளிர்காலத்தில் கீழ்வாத பிரச்சினை உள்ளவர்களுக்கு முள்ளங்கி அருமருந்தாகும். எனவே யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க முள்ளங்கியின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: அதிக யூரிக் அமிலத்தைக் குறைக்க; 1 ரூபாய்க்கு கிடைக்கும் இதை சாப்பிட்டாலே போதும்!
முள்ளங்கி யூரிக் அமிலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது?
நிபுணர்களின் கூற்றுப்படி, முள்ளங்கி யூரிக் அமிலத்திற்கான மருந்து அல்ல. ஆனால் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவும் சில பண்புகள் அதில் உள்ளன. அதாவது முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பயோ ஆக்டிவ் சேர்மங்கள் உள்ளது. முள்ளங்கியில் இருக்கும் இந்த சேர்மங்கள் பியூரின்களின் திரட்சியைத் தடுக்கவும், ஆக்சலேட் கற்களைக் குறைத்து, அவற்றை அகற்றவும் உதவுகின்றது. முள்ளங்கியில் பியூரின் அளவு ரொம்பவே குறைவாக இருப்பதால், யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். அதுமட்டுமின்றி முள்ளங்கியில் இருக்கும் வைட்டமின் சி, ஃபிளவனாய்டுகள் மற்றும் பிற ஆக்சிஜனேற்ற பண்புகள் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகின்றது. முக்கியமாக, முள்ளங்கியில் 90-95% தண்ணீர் உள்ளதால், இது உடலை நீரேற்றமாக வைப்பது மட்டுமின்றி சிறுநீர் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் யூரிக் அமிலமானது சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறிவிடும். முள்ளங்கியில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகின்றது.
யூரிக் அமில பிரச்சனைக்கு முள்ளங்கி சாப்பிடும் முறை:
- தினமும் காலை வெறும் வயிற்றில் முள்ளங்கி சாற்றை குடித்து வரலாம்.
- முள்ளங்கி அரைத்து சிறிதளவு தேன் அதில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம்.
- முள்ளங்கியில் கூட்டு, அவியல் பொரியல் போன்றவற்றை கூட செய்து சாப்பிடலாம்.
- முள்ளங்கியில் பரோட்டா செய்தும் சாப்பிடலாம்.