கால் வீக்கத்தை அடியோட விரட்டும் பூண்டு எண்ணெய்.. எப்படி தயாரிப்பது?
Garlic Oil Benefits : கால் வீக்கத்தை போக்க பூண்டு எண்ணெய் ஒரு நல்ல தீர்வாகும். இந்த எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று இங்கு காணலாம்.

கால் வீக்கத்தை அடியோட விரட்டும் பூண்டு எண்ணெய்.. எப்படி தயாரிப்பது?
கால் வீக்கம் என்பது நீண்ட நேரம் நிற்பது, காயங்கள், மூட்டு வலி அல்லது சர்க்கரை நோய் போன்ற உடல்நல பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். பாதங்களில் ஏற்படும் வீக்கத்திற்கு வலி நிவாரணி எண்ணெய் உள்ளிட்ட பல எண்ணெய்களை பயன்படுத்துவோம். அவற்றில் ஒன்றுதான் பூண்டு எண்ணெய். இப்போது வீங்கிய கால்களை போக்க பூண்டி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பூண்டு எண்ணெய் :
வீக்கத்தை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் வீக்கத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. கால் வீக்கத்தை குறைக்க பூண்டு எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: குதிங்கால் வலியை நொடியில் போக்கும் இந்த '1' இலை பற்றி தெரியுமா?
பூண்டு வெண்ணையின் மருத்துவ குணங்கள்:
- பூண்டில் அலர்ஜி எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன மேலும் இதில் இருக்கும் அல்லிசின் என்று சேர்மம் வீக்கம் மற்றும் வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது. கூடுதலாக பூண்டு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- பூண்டு எண்ணெய் கொண்டு வீங்கி இருக்கும் காலில் மசாஜ் செய்தால் தசைகளை தளர்த்தி, சோர்வை நீக்கும். நீங்கள் நீண்ட நேரம் நின்றாலோ அல்லது உங்களது காலில் வீக்கம் இருந்தாலும் பூண்டு எண்ணெயை பயன்படுத்தலாம்.
- பூண்டில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். மழைக்காலத்தில் அழுக்கு காரணமாக பாதத்தில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பூண்டு எண்ணெய் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. பூண்டு எண்ணெய் உங்களது சருமத்திற்கு ஊட்டமளித்து மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.
பூண்டு எண்ணெய் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
தோலுரித்த பூண்டு பற்கள் - 15
தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் - 1 கப்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பூண்டு வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்குங்கள். இதனுடன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டின் நிறம் நன்றாக மாறியதும் அதை வடிகட்டி ஆற வைத்து பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி தேவைப்படும்போது பயன்படுத்துங்கள்.
பூண்டு எண்ணெய் பயன்படுத்தும் முறை:
பாதத்தின் வீங்கிய பகுதிகளில் பூண்டு எண்ணெய் நன்றாக தடவுங்கள். பிறகு வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு கால்களை சிறிது நேரம் உயர்த்தி வையுங்கள். பூண்டு எண்ணெயால் கால்களை மசாஜ் செய்த பிறகு வீங்கி இருக்கும் அந்த இடத்தில் ஒரு துண்டு கொண்டு மூடவும். இப்படி செய்வதன் மூலம் வீக்கம் குறைந்து நிவாரணம் கிடைக்கும். சிறந்த பலன்களுக்கு இந்த எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: கர்ப்பகாலத்தில் 'கால்' வீங்குதா? 'இப்படி' ஃபாலோ பண்ணா உடனே குறையும்!!