இந்த பழங்கள் ஆரோக்கியத்திற்கு அமுதம்..! ஆனால் இவற்றின் விதைகள் மட்டும் விஷம்..!!
பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், சில பழங்களின் விதைகளை சாப்பிட்டால், நாம் இறந்துவிடுவோம். அத்தகைய பழங்கள் என்ன தெரியுமா..?
ஆரோக்கியமாக இருக்க சமச்சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு சீரான உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்க வேண்டும். ஆனால் அனைத்து பழங்களும் காய்கறிகளும் மனித ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவை அல்ல.
ஏனெனில், நாம் சாப்பிடும் சில பழங்கள் நம் ஆரோம்கியத்திற்கு நல்லது என்றாலும் அவற்றின் விதை தீங்கு விளைவிளைவிக்கும். இப்படிப்பட்ட பழங்கள் உலகில் உண்டா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஆனால் அதுதான் உண்மை. மேலும் இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட விஷ விதைகள் அடங்கிய சுவையான பழங்களைப் பற்றித்தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.
லிச்சி பழம்: கோடையில் வரும் லிச்சி பழம் இயற்கையாகவே நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அதன் விதைகள் மட்டும் நம் உடலுக்கு கேடு. இது உடலுக்கு நச்சுக்களை விளைவிப்பதாக கூறப்படுகிறது. சுகாதார ஆராய்ச்சியின் படி, இதில் உள்ள சில அமினோ அமிலங்கள் நமது இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும் மற்றும் மூளை வீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே லிச்சி பழ விதைகளை தவிர்க்கவும்.
தக்காளி விதைகள்: நமது அன்றாட சமையலுக்கு தக்காளி பழம் அவசியம். சமைத்த தக்காளியை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் தக்காளி விதைகளை பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும். இதற்கு முக்கிய காரணம் தக்காளி விதைகளில் ஆக்சலேட் இருப்பதுதான். எனவே தக்காளி விதைகளை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் சிறுநீரகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் கவனமாக இருங்கள்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, செரிமானத்திற்கும் உதவும் அற்புதமான பழங்கள்..
ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்தது. நம் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. எந்த அளவிற்கு ஆப்பிளில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது அது அளவிற்கு அவற்றின் விதையில் தீங்கு நிறைந்துள்ளது. ஆம், இவை மனித ஆரோக்கியத்திற்கு சயனைடு போன்றது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆப்பிள் விதைகளில் ஹைட்ரஜன் சயனைடு இருப்பதாக அறியப்படுகிறது. எனவே ஆப்பிள் விதைகளை மட்டும் சாப்பிட வேண்டாம்.
இதையும் படிங்க: 72 மணி நேரமும் பழங்களை மட்டுமே சாப்பிடுறீங்களா? இந்த பிரச்சினைகள் வரும்.. ஜாக்கிரதை!
பிற பழங்களின் விதைகள்: மேலே உள்ள அனைத்து பழங்களுடனும் மற்ற பழங்களும் அடங்கும். அவற்றின் விதைகள் நம் உடலில் மிகவும் நச்சு விளைவை ஏற்படுத்தும். உதாரணமாக, ஆப்ரிகாட், பிளம்ஸ், செர்ரி மற்றும் பீச் ஆகியவை அடங்கும். எனவே நீங்கள் இந்த பழங்களை சாப்பிட விரும்பினால், விதைகளை மட்டும் சாப்பிட வேண்டாம். உங்கள் உடல்நலம் உங்கள் பொறுப்பு! கவனமாக இருங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D