- Home
- உடல்நலம்
- Healthy Life : 50 வயசுக்கு பின் இந்த '5' கெட்ட பழக்கங்களை விட்டுருங்க! இளமையா ரொம்ப நாள் வாழலாம்
Healthy Life : 50 வயசுக்கு பின் இந்த '5' கெட்ட பழக்கங்களை விட்டுருங்க! இளமையா ரொம்ப நாள் வாழலாம்
Healthy Lifestyle After 50 : 50 வயதிற்கு பின் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான முதுமைப் பருவத்தை அடைய சில கெட்டப் பழக்கங்களை கைவிடவேண்டும்.

Healthy Lifestyle After 50
பொதுவாக வயதாகும்போது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதிலும் நம்முடைய பழக்கங்கள் தான் தோற்றத்திற்கு காரணம். ஆரோக்கியமான பழக்கங்கள் இளமையான தோற்றத்தையும், நீண்ட ஆயுளையும் தரும். அதுவே கெட்டப் பழக்கங்களைப் பின்பற்றினால் சீக்கிரமே வயதான தோற்றம், நோய்களும் வரலாம். இந்தப் பதிவில் 50 வயதிற்கு பின் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான முதுமைப் பருவத்தை அடைய என்னென்ன கெட்டப் பழக்கங்களை கைவிடவேண்டும் என காணலாம்.
நடைபயிற்சி
சுறுசுறுப்பாக இருக்காவிட்டால் தசை இழப்பு ஏற்படும். உடலில் இயக்கம் குறைய குறைய பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். மந்தமாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமரக் கூடாது. தினமும் நடைபயிற்சி, யோகா, வலிமை பயிற்சிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது. தினமும் நடப்பவர்களுக்கு நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைந்து ஆயுள் அதிகரிக்கிறது.
தாமதமாக தூங்குதல்
புகைப்பிடித்தல் சரும ஆரோக்கியம், உள்ளுறுப்புகளை பாதிக்கிறது. அடிக்கடி மது அருந்துவது கல்லீரல் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனால் தூக்கத்தின் தரம் கெடலாம். தொடர்ந்து மோசமாக தூங்கினால் அறிவாற்றல் குறையும். எடை அதிகரிக்கும். இதய பிரச்சினைகள் வரும் வாய்ப்புள்ளது. பல்வேறு நோய்கள் வர தூக்கமின்மைதான் காரணம். 50 வயதுக்கு பின் கட்டாயம் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
உணவுப்பழக்கம்
கட்டாயம் காலை உணவை உண்ண வேண்டும். வயதான காலத்தில் காலை உணவை தவிர்த்தால் இறப்பு அபாயம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பேக்கரி உணவுகள், அதிகபடியான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இருக்கும் உணவை சாப்பிடுவதை கைவிடவேண்டும். இது எடையை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்கள் வர வழிவகுக்கும். ஆரோக்கியமான வீட்டில் சமைத்த சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்ணுங்கள்.
மன ஆரோக்கியம்
உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களை தவிருங்கள். தியானம், யோகா போன்ற மன அமைதிக்கான பயிற்சிகளை செய்யுங்கள். மன அழுத்தம் வயதாகும் நிகழ்வை துரிதப்படுத்திவிடும். இதனால் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். மற்றவர்களுடன் பழகுதல், குடும்பத்தினருடன் உரையாடுதல் போன்றவை முக்கியம். குழுவாக வாக்கிங் கோயில், பூங்கா செல்லுதல் என ஆக்டிவாக இருக்க வேண்டும்.
எலும்பு ஆரோக்கியம்
எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும் நடைபயிற்சி, வலிமை பயிற்சிகளை செய்ய வேண்டும். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கால்சியம், வைட்டமின் டி உணவுகளை சாப்பிட வேண்டும். இல்லையெனில் ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு முறிவுகள் வரலாம்.
மேலே தவிர்க்கச் சொன்ன விஷயங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினால் வயதாகும் செயல்முறை தாமதமாகும். நீங்கள் 100 வயதானாலும் இளமையான தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.