- Home
- உடல்நலம்
- Eggs : முட்டை சாப்பிட்ட உடனே தெரியாம கூட 'எதை' சாப்பிடக் கூடாது? மீறினா நன்மைக்கு பதில் தீமைதான்
Eggs : முட்டை சாப்பிட்ட உடனே தெரியாம கூட 'எதை' சாப்பிடக் கூடாது? மீறினா நன்மைக்கு பதில் தீமைதான்
முட்டை ஒரு சூப்பர் ஃபுட் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை சாப்பிட பிறகு சில உணவுகள் சாப்பிடக்கூடாது. மீறினால் நன்மைக்கு பதிலாக தீமைதான் வரும்.

Avoid These Foods After Eating Eggs
முட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பர் ஃபுட். முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். என்னதான் முட்டையில் சத்துக்கள் நிறைந்த நிறைந்திருந்தாலும், முட்டை சாப்பிட்ட பிறகு சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நன்மைக்கு பதிலாக தீங்கு தான் ஏற்படும். இந்த பதிவில் முட்டை சாப்பிட்ட பிறகு என்னென்ன உணவுகள் சாப்பிடக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
சர்க்கரை :
முட்டை சாப்பிட்ட பிறகு சர்க்கரை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை மற்றும் சர்க்கரையில் இருக்கும் அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து சில மூலக்கூறுகளை உருவாக்கும். அதை நம்முடைய உடல் உறிஞ்சு கொள்ளுவது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் இரத்தம் உறைந்து போக கூட வாய்ப்பு உள்ளன.
சோயா பால்
முட்டை சாப்பிட்ட பிறகு சோயா பால் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இது தவறு. இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் நம்முடைய உடல் புரோட்டீன் உறிஞ்சுவதை தடுக்கும்.
மீன்
முட்டை மற்றும் மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டாலோ அல்லது அடுத்தடுத்து சாப்பிட்டாலோ ஒவ்வாமை ஏற்படுத்தும்.
டீ
முட்டை சாப்பிட்ட பிறகு கவிச்ச வாடையைப் போக்க சிலர் டீ குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது ஆரோக்கியமற்ற செயல். ஏனெனில் தேயிலையில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் இணைந்து உடலுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். மேலும் உடலில் நச்சுக்களின் அளவும் அதிகரிக்கும்.
பழங்கள்
முட்டை சாப்பிட்ட பிறகு ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல. காரணம் இது செரிமானத்தை மெதுவாக்கும்.
பன்னீர்
பலர் முட்டையுடன் பன்னீர் கலந்து ஸ்பெஷல் ரெசிபி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலம் சேதமடையும். இதனால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.
வாழைப்பழம்
முட்டை சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. காரணம் இவை இரண்டும் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கிவிடும். மேலும் மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினையையும் ஏற்படுத்தும்.
