Eggs : முட்டையை இப்படி சமைத்து சாப்பிடாதீங்க! உங்க ஆரோக்கியத்திற்கு டேஞ்சர்!!
முட்டையின் முழு ஊட்டச்சத்துக்களை பெற அதை எப்படி சமைத்து சாப்பிட கூடாது வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எளிதான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுக்கு முட்டை சிறந்த தேர்வாகும். புரதங்கள், கலோரிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளன. இதனால் தான் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டுமென்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் முட்டையின் நன்மைகளை பெற அதை சாப்பிடும் விதத்தைப் பொறுத்து தான் அமையும்.
ஆம், நீங்கள் முட்டையை சரியாக சமைக்கவில்லை என்றால் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் முட்டையை எப்படி சமைத்து சாப்பிடக்கூடாது என்றும், ஆரோக்கியமான வழியில் முட்டையை எப்படி சமைக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.
சிலர் முட்டையை பச்சையாகவோ அல்லது பாதி சமைத்து சாப்பிடுவதை விரும்புவார்கள். ஆனால் இப்படி முட்டையை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் முட்டையில் சால்மோனெல்லா போன்ற கிருமிகள் இருக்கும். அவை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே முட்டையை நன்கு சமைத்து சாப்பிடுங்கள்.
முட்டையை வெண்ணெய் அல்லது எண்ணெயில் வறுக்கும் போது அதன் கொழுப்புச்சத்து மேலும் அதிகரிக்கும். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக முட்டையை வேகவைத்து சமைத்து சாப்பிடுவது நல்லது.
முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று கருதி பலர் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் முட்டையின் வெள்ளை கருவை அதிகமாக சாப்பிடுவதும் நல்லதல்ல. ஒரு நாளைக்கு 1-2 முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவது போதுமானது. அதிக கொழுப்பு அல்லது இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் முட்டையின் வெள்ளை கருவை குறைவாக சாப்பிட வேண்டும்.
முட்டை சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. காலையில் முட்டை சாப்பிடுவது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும். வயிறை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். ஆனால் இரவில் தூங்கு செல்வதற்கு முன் முட்டை சாப்பிடுவது நல்லதல்ல. செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீங்கள் தினமும் வெறும் முட்டை மட்டும் சாப்பிடுவதற்கு பதிலாக அதனுடன் வெங்காயம், தக்காளி கீரை போன்றவற்றை சேர்த்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் பல மடங்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.