- Home
- உடல்நலம்
- Oranges : குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? அடிக்கடி சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
Oranges : குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? அடிக்கடி சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நல்லதா? அப்படி சாப்பிட்டால் சளி பிடிக்குமா? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த சீசனில் பலவகையான பழங்கள் சந்தையில் கிடைக்கும். அவை சுவையானது மட்டுமல்ல ஊட்டச்சத்தும் நிறைந்தவை. அவற்றில் ஒன்றுதான் ஆரஞ்சு பழம். இது சுவையான மற்றும் ஜூஸியான பழமாகும். வைட்டமின் சி இன் களஞ்சியமான இந்த பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். அது உண்மையா? அப்படி குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு என்ன ஆகும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இது வைட்டமின் சி யின் சிறந்த மூலம் என்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. எனவே, குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வைரஸ் தொற்றுகள், சளி, இருமல், காய்ச்சல் வராது.
குளிர்காலத்தில் சருமம் வறண்டும், உயிரற்றதாக மாறிவிடும். இதை தடுக்க ஆரஞ்சு பழம் மிகவும் நன்மை பயக்கும். அதாவது ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும், சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், கொலாஜன் உற்பத்தி செய்யவும் உதவுகிறது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.
அதுபோல ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது செரிமான அமைப்பை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. குளிர் காலத்தில் மலச்சிக்கல், வாயு பிரச்சனை அடிக்கடி சந்திப்போம். எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலை சுத்தப்படுத்தி, வயிற்று பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
எப்போது சாப்பிட வேண்டும்? : குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட சிறந்த நேரம் காலை அல்லது மதியம் ஆகும். ஆனால் வெறும் வயிற்றில் ஒருபோதும் ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது. அதே சமயம் அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். ஒரு நாளைக்கு 1-2 ஆரஞ்சு பழம் போதுமானது தான்.
நினைவில் கொள் : குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், உங்களுக்கு ஏற்கனவே தொண்டை வலி அல்லது டான்சில்ஸ் பிரச்சனை இருந்தால் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.