ஆரஞ்சு பழத்தோலை முகத்திற்கு பயன்படுத்தும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் இல்லாமல் எப்போதுமே ஜொலிஜெளிப்பாக இருக்க வேண்டும் என்று தான் எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள். ஆனால் எந்திரமாக அவர்கள் வேலை செய்வதால் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை. இதன் விளைவாக சருமம் முன்கூட்டியே முதுமை அறிகுறிகளை சந்திக்கும் நிலை ஏற்படும். இது தவிர முகப்பருக்கள் போன்ற பலவிதமான சரும பிரச்சனைகளும் ஏற்படலாம்.

இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் தங்களது சருமத்தை பராமரிக்க ஆரஞ்சு பல தோல் பொடி பெரிதும் உதவுகிறது. இது சருமத்தை தங்கம் போல மின்ன உதவும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் அதன் தோலின் பொடியில் சில பொருட்கள் சேர்த்து ஃபேஸ் பேக்காக போட்டால் சருமம் ஒளிரும். சரி இப்போது ஆரஞ்சு பழ தோலில் என்னென்ன ஃபேஸ் பேக்குகள் போடலாம் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

1. தேன், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு பழத்தோல் பொடி ஃபேஸ் பேக் :

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி, தேன் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது முகத்தில் தடவி சுமார் பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும்.

2. ஆரஞ்சு பழ தோல் பொடி மற்றும் தயிர் ஃபேஸ் பேக் :

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலாகி அதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் படிந்திருக்கும் தூசியை நீக்கி பொலிவாகும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை இரவு தூங்கும் முன் தான் போட வேண்டும்.

3. ஆரஞ்சு பல தோல் பொடி ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் :

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் முல்தானிமட்டி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து அதை முகத் மற்றும் கழுத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் சுத்தமாகும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் பெஸ்ட். இவர்கள் வாரத்திற்கு ஒரு முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்கும்.

4. ஆரஞ்சு பழ தோல் பொடி, சந்தனம் மற்றும் வால்நட் ஃபேஸ் பேக்:

நீங்கள் பார்ட்டி அல்லது திருமண விழாவிற்கு செல்லப் போகிறீர்கள் என்றால் உங்களது முகாம் பளபளப்பாக இருக்க வேண்டுமானால், இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி, சந்தன பொடி மற்றும் வால்நட் பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் நாள் முழுவதும் பளிச்சென்று இருக்கும்.

5. ஆரஞ்சு பழ தோல் பொடி மற்றும் டீ ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக் :

உங்களது முகத்தில் அதிகமாக முகப்பரு அல்லது தழும்புகள் இருந்தால் இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு நல்ல பலனை தரும் இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி, டீ ட்ரீ ஆயில் 2 சொட்டு, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அந்த பேஸ்டை முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளை பெற இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

6. ஆரஞ்சு தோல் பொடி, தேன், சர்க்கரை மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக் :

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி, இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாகி அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் மற்றும் நிறம் கொடுக்கும்.