navel: தொப்புளில் இரவு தூங்கும் முன் எண்ணெய் தடவிக் கொண்டால் இத்தனை நன்மைகளா? நிரூபிக்கப்பட்ட உண்மை!!
நாள்தோறும் தூங்கும் முன் இரவில் தொப்புளில் எண்ணெய் தடவிக் கொண்டால் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மைகள் கிடைக்கும்.
ஆதிகாலத்திலே தூங்குவதற்கு முன்பாக வயிற்றில் தொப்புளில் எண்ணெய் தடவுவது வழக்கம். இப்படி தொப்புளில் எண்ணெய் தடவிக்கொண்டு மசாஜ் செய்து ரிலாக்ஸாக தூங்கினால் உடல் ஆரோக்கியமான இருக்குமாம். இது நிரூபிக்கப்பட்ட உண்மை என்கிறார்கள்.
தேங்காய் எண்ணெய், நெய், ஆமணக்கு எண்ணெய் என எந்த எண்ணெய்களையும் இதற்கு பயன்படுத்தலாம். இப்படி தொப்புளில் எண்ணெய் தடவிக் கொண்டு ஒவ்வொரு இரவும் தூங்கி பழகினால் சரும ஆரோக்கியம் மேம்படும். நம்முடைய நரம்பு மண்டலத்தில் இருக்கும் பாதிப்புகளும் கூட சரியாகும்.
தூங்கும் முன் 3, முதல் 7 துளிகள் நெய்யும், தேங்காய் எண்ணெயும் தொப்புளில் ஊற்றி வயிற்றை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். கண்களில் இருக்கும் வறட்சி நீங்கி கண் பார்வை மேம்படும். இதை போல எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்காக 3 முதல் 7 துளிகள் வரை எடுத்து கொள்ளலாம்.
அதை போலவே கடுகு எண்ணெயை நம்முடைய தொப்புளில் தடவினால் நல்லது. வயிற்றுப் பகுதி முழுவதும் மசாஜ் செய்தால் மூட்டுகளில் இருக்கும் வலியை நீக்கும். ஆமணக்கு எண்ணெய் தடவி வயிற்றையும் தொப்புளையும் மசாஜ் செய்தால் முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி கூட பறந்து போகும். அதுமட்டுமில்லை.. எலும்புகள் கூட வலிமை பெறும்.
இதையும் படிங்க: செம்பருத்தி பூ தலைமுடிக்கு நல்லதுனு நினைச்சிருப்பீங்க! இந்த 1 பூ கொண்டு எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?
உங்களுக்கு முகப்பரு இருக்கிறதா? அப்படியானால் பருக்கள் நீங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க 4 சொட்டு வேப்பெண்ணெயை இரவு தூங்கும் முன் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் போதும். தொப்புளில் தொடங்கி அரை அங்குலம் மசாஜ் பண்ணுங்கள். இரவு தூங்குவதற்கு முன் இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: மறந்தும் கடன் வாங்க கூடாத நாட்கள்.. மீறி வாங்கினால் கடன் சுமை தீராமல், அட்டை போல ஒட்டிக் கொள்ளும்!