மறந்தும் கடன் வாங்க கூடாத நாட்கள்.. மீறி வாங்கினால் கடன் சுமை தீராமல், அட்டை போல ஒட்டிக் கொள்ளும்!
கடன் வாங்கவே கூடாத நாள்கள் குறித்து இந்த பதிவில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு அவசரமாக பணம் தேவைப்படும்போது யோசிக்காமல் சென்று கடன் வாங்கிவிடுவோம். அப்போது என்ன நாள், கிழமை என யோசித்து கொண்டிருக்கமாட்டோம். ஆனால் அது தவறான விஷயம். இப்படி கடன் வாங்குவதால் சிலரால் கடனை அடைக்கவே முடியாது.
கடன் வாங்க கூட நாள், கிழமை, நேரம் எல்லாம் பார்க்கவேண்டும். அஸ்தம் நட்சத்திரம் வரும் நாள்களில் மறந்தும் கடன் வாங்கக் கூடாது. செவ்வாய் அன்று கடன் வாங்கவே கூடாது. ஆனால் அன்றைய தினம் கடன் அடைக்கலாம்.
ராகு காலம், எமகண்டம் மாதிரி குளிகை நேரம் எனவும் ஒன்றுண்டு. மறந்தும் அந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். அப்போது வாங்கும் கடன் ஒருநாளும் அடையாது. ஆனால் குளிகை நேரத்தில் திருப்பி கொடுப்பது நல்லது. சீக்கிரம் கடன் அடையும்.
அது மாதிரி அஸ்தம் நட்சத்திரம் இருக்கும் நாளில் நீங்கள் வாங்கும் கடன் உங்களை விடாது. வளர்ந்து கொண்டே இருக்குமாம். காலண்டரில் அன்றைய நட்சத்திரம் என்ன என்பதை பார்த்துவிட்டு கடன் வாங்க செல்லுங்கள். ஆனால் எல்லா நேரமும் சாத்தியமில்லை. சில திடீர் செலவுகளான மருத்துவ செலவு, உயிர் தொடர்பான பிரச்சனைக்கு என நாள், கிழமை பார்க்காமல் கடன் வாங்கி விட்டால் தவறாமல் பரிகாரம் செய்துவிடுங்கள்.
இதையும் படிங்க: பங்குனி உத்திரம் 2023 எப்போது? விரத முறை.. வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!
பரிகாரம்..!
தொடர்ந்து 16 வாரத்தில் வரும் செவ்வாய் அன்று இந்த பரிகாரத்தை செய்தால் போதும். ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மாவு, கொஞ்சம் நாட்டு சர்க்கரை, 2 ஏலக்காய் தட்டி போடுங்கள். இதனை பிரசாதம் போல செய்து பிள்ளையாருக்கு படைத்துவிடுங்கள். இந்த நிவேதனத்தை கொண்டு எறும்புகளுக்கு தானமிடுங்கள். இதனை மனதார செய்ய வேண்டும்.
வினை தீர்க்கும் விநாயகனிடம் உங்கள் கடனை அடைக்க மனமுருகி வேண்டுங்கள். மகாலட்சுகியிடமும் கேட்டு கொள்ளுங்கள். இந்த எளிய பரிகாரம் 16 வாரங்களில் உங்க பிரச்சனைகளை தீர்க்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாற, குளிக்கும் தண்ணீரில் இதை மட்டும் கலந்து விட்டால் உங்களுக்கு அதிர்ஷ்ட மழைதான்!