கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாற குளிக்கும் தண்ணீரில் இதை மட்டும் கலந்து விட்டால் உங்களுக்கு அதிர்ஷ்ட மழைதான்!
குளிக்கும் நீரில் வீட்டிலுள்ள இந்த 5 பொருள்களை சேர்த்து குளிர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.
எல்லோரும் தனக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டுமென நிறைய விஷயங்களை முயன்று பார்க்கின்றனர். வெற்றி, பணம் மற்றும் புகழைப் பெறுவதற்கு ஆதரவாக இருக்கும் அதிர்ஷ்டத்தை அடைய சில பரிகாரங்களைத் தெரிந்து கொள்ள ஜோதிடத்தைப் பார்க்கிறார்கள். ஜோதிடம் நமக்கு ஆரோக்கியம், செல்வம், உறவுகள், தொழில் ஆகியவை குறித்து சொல்கின்றன. அதில் எளிய வழிகளில் அதிர்ஷ்டத்தை அடைவதை குறித்து இங்கு காணலாம்.
மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்திய ஜோதிட சாஸ்திரத்தின்படி நாம் குளிக்கும் நீரில் மஞ்சளை போடுவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். மஞ்சளில் கிருமிகள் சுத்திகரிப்பு பண்புகள் உள்ளது. இது நம் உடலில் இருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கும். வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து குளித்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
சந்தனம் மதச் சடங்குகள், சரும பராமரிப்பு போன்ற பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஜோதிடத்தில், சந்தனம் வெற்றி, செல்வம், புகழைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. குளிக்கும் நீரில் சந்தன எண்ணெய் அல்லது சந்தனப் பொடியைச் சேர்ப்பது மனதிற்கு அமைதி தரும். மன அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும். நம் உடலுக்கு குளிர்ச்சியும் தரும்.
வேப்பமரம் தெய்வாம்சம் பொருந்தியது. இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினி பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்திய ஜோதிடத்தில், வேம்பு உடலில் இருந்து எதிர்மறை ஆற்றலை அகற்றக்கூடியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. குளிக்கும் நீரில் வேப்பம்பூவை போட்டு குளித்து வந்தால் நல்ல அதிர்ஷ்டம் வரும்.
துளசியை பொறுத்தவரை இந்து மதத்தில் ஒரு புனிதமான தாவரமாகும். இது ஆயுர்வேதத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடலில் இருந்து எதிர்மறை ஆற்றலை அகற்றும் என நம்பப்படுகிறது. இந்திய ஜோதிடத்தில், துளசி செடி, வெற்றி செழிப்புடன் தொடர்பு கொண்டது. நாம் குளிக்கும் நீரில் சில துளசி இலைகள் அல்லது துளசி எண்ணெயைச் சேர்ப்பது நல்லது. இதனால் மன அழுத்தம் குறையும். நேர்மறை ஆற்றல் அதிகமாகும்.
இதையும் படிங்க: kidney: ஆயுளுக்கும் சிறுநீரக பிரச்சினை வராது.. இந்த 4 விஷயங்களை செய்தால்.. உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கும்..!
ரோஜா இதழ்களை வெறும் நறுமண மலர் என நினைத்திருப்பீர்கள். ஆனால் அவற்றின் தோல் பராமரிப்பு நன்மைகளுக்காக பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜோதிடத்தில், ரோஜா இதழ்கள் அன்பு, மகிழ்ச்சி, வெற்றியைத் தருவதாக நம்பப்படுகிறது. குளிக்கும் நீரில் ரோஜா இதழ்களைச் சேர்ப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த ரோஜா பூக்களின் இதழ்கள் மனதிலும் உடலிலும் அமைதியான விளைவைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: செம்பருத்தி பூ தலைமுடிக்கு நல்லதுனு நினைச்சிருப்பீங்க! இந்த 1 பூ கொண்டு எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?