kidney: ஆயுளுக்கும் சிறுநீரக பிரச்சினை வராது.. இந்த 4 விஷயங்களை செய்தால்.. உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கும்..!
kidney diseases prevention: கோடைகாலம் சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பருவகாலம். சிறுநீரகம் தொடர்பான நோய்களை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பயனுள்ள டிப்ஸ்.
Tamil health updates Kidney diseases: சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் சிறுநீரகம் தொடர்பான நோய்களை மக்கள் சந்தித்து வருகிறார்கள். நீரிழிவு நோய், உடல் பருமன், உயா் ரத்த அழுத்தம், காசநோய் தாக்கம், மாத்திரைகளின் பக்கவிளைவு போன்றவை சிறுநீரக நோய் வருவதற்கு சில காரணங்கள்.
இந்த பிரச்சனைக்கு காரணம் உங்களுடைய சிறு தவறுகள் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை ஆரோக்கியமாக வைத்து கொள்ள எளிய வழிகள் உள்ளன.
உணவு கவனம்
சில உணவுகளை சிறுநீரகங்களின் நலனுக்காக தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் எடுத்து கொள்ள வேண்டாம். உப்பு குறைவாக சேர்த்து கொள்ளலாம்.
சாப்பிடக் கூடியவை: முட்டைக்கோஸ், கொடுவா மீன், சிவப்பு குடைமிளகாய், காலி பிளவர், ஆப்பிள், அன்னாசி, கீரை, வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, முட்டையின் வெள்ளை கரு, தோல் நீக்கிய சிக்கன் ஆகிய்வை சாப்பிடலாம். உணவில் காய்கறிகள், பழங்கள், தானியங்களை சேர்க்கலாம்.
சில மருந்துகள் சிறுநீரகத்தை நாசம் செய்யும் சக்தி கொண்டவை. மருந்துகளை அதிகம் எடுக்கும்போது உங்கள் சிறுநீரகத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து சாப்பிடக்கூடாது.
தண்ணீர் தண்ணீர்..!
தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. அதனால் உங்களுக்கு சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக தொற்று பிரச்சனைகள் ஏற்படாது. ஒரு நாளைக்கு 2 லிட்டர் நீர் குறைந்தபட்சம் குடியுங்கள்.
போதை வேண்டாம்!
புகைபிடித்தல், மது அருந்துதல் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். சிறுநீரக பிரச்சினைகள் வேண்டாம் என நீங்கள் நினைத்தால், புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் ஆகியவற்றை கைவிடுங்கள்.
தினசரி உடற்பயிற்சி
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி பின்பற்றினால் நீரிழிவு, இதய நோய் தாக்கம் குறைவாகவே உள்ளன.
இதையும் படிங்க: எப்போதும் வீட்டில் பணம் பெருகணுமா? இந்த 4 பொருள் ஒன்றாக இருக்கணும்.. அவ்வளவுதான் பண ராசி வந்திடும்..!
கவனிக்கக் கூடிய அறிகுறிகள்
உங்களுடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் வருவது குறைந்துவிடும். பசி எடுக்காது. வாந்தி வரலாம். தூக்கம் குறைந்து கடும் சோர்வு, உடலில் அரிப்பு, முகம், கை கால்களில் வீக்கம் கூட வரலாம். சிலருக்கு பாதிப்பை பொறுத்து சிறுநீரில் ரத்தம், சிறுநீரை வெளியேற்றும் போது வலி, சிறுநீர் கழித்தால் எரிச்சல் ஏற்படும். இதில் ஏதேனும் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
இதையும் படிங்க: காலி சிலிண்டரை மாத்துறப்ப இது மட்டும் நடந்தா அவ்வளவுதான்.. எப்படி கவனமா இருக்கணும் தெரியுமா?