ஆரோக்கியமாக வாழ ஆசையா? அப்போ இந்த 6 விஷயங்களுக்கு கண்டிப்பாக "நோ" சொல்லாதீங்க
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற லைஃப் ஸ்டைல் பின்பற்றுகிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்பினால் இந்த 6 விஷயங்களுக்கு மட்டும் எந்த காரணத்திற்காகவும் நோ சொல்லி விடாதீர்கள்.

போதுமான தூக்கம் :
சரியான தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் அவசியம். நாம் தூங்கும்போது, நமது உடல் தன்னைத்தானே சரிசெய்து புதுப்பித்துக் கொள்கிறது. மூளை தகவல்களை ஒருங்கிணைத்து நினைவுகளை உருவாக்குகிறது. போதுமான தூக்கம் இல்லாவிட்டால், சோர்வு, கவனமின்மை, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீண்ட காலப் போக்கில், இது உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கு இன்னும் அதிக தூக்கம் தேவைப்படலாம். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச் செல்வ கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். படுக்கையறை எப்பொழதும் அமைதியாகவும், இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தூங்கும் நேரத்திற்கு முன் மொபைல், லேப்டாப் மற்றும் டிவி பார்ப்பதை தவிர்த்து புத்தகம் படித்தல், தியானம் போன்றவற்றை மேற்க் கொள்ளவேண்டும்.
சத்தான உணவு :
நாம் உண்ணும் உணவு நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சத்தான உணவு உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, மேலும் உடல் உறுப்புகள் சீராக செயல்பட உதவுகிறது.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ளவேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளான் பருப்பு வகைகள், பீன்ஸ், மீன், கோழி, முட்டை மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த மீன், ஆளி விதைகள், சியா விதைகள், அவகேடோ போன்றவறை கண்டிப்பாக உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தவறாத உடற்பயிற்சி :
உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசைகளை வலுப்படுத்துகிறது, எலும்புகளை அடர்த்தியாக்குகிறது, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.
பெரியவர்கள் தவறாமல் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி (வேகமாக நடப்பது) அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி (ஓடுதல்) செய்ய வேண்டும். கூடுதலாக, வாரத்திற்கு இரண்டு முறையாவது தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
போதுமான நீர் அருந்துதல் :
நீர் நமது உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இன்றியமையாதது. இது ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்ல உதவுகிறது, உடல் வெப்பநிலையை சீராக்குகிறது, கழிவுகளை வெளியேற்றுகிறது மற்றும் மூட்டுக்களை உயவூட்டுகிறது. போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால், நீரிழப்பு ஏற்பட்டு சோர்வு, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம்.
பொதுவாக ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நன்று. இது உடல் செயல்பாடு, காலநிலை மற்றும் உடல்நிலையைப் பொறுத்து இது மாறுபடலாம். உணவுக்கு முன் மற்றும் பின் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். தாகம் எடுக்கும் முன் தண்ணீர் குடிக்கவும்.
மன அழுத்த மேலாண்மை :
நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால், கட்டுப்படுத்தப்படாத மன அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது தூக்கமின்மை, தலைவலி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா போன்றவை மன அழுத்தத்தை போக்க உதவுகின்றன. பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல் போன்றவை மன அழுத்தத்தை வெகுவாக போக்க உதவுகின்றன.
சமூக உறவுகள் :
ஆரோக்கியமான சமூக உறவுகளைப் பேணுவது நமது மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வலுவான தொடர்புகள் இருப்பது தனிமை மற்றும் மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்கிறது. மற்றவர்களுடன் பேசுவது மற்றும் பழகுவது நமக்கு ஆதரவையும், புரிதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்த பழக்கங்களை உங்கள் தினசரி வாழ்க்கையில் ஒருங்கிணைப்பதன் மூலம், நீங்கள் உகந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அடைய முடியும். சிறிய மாற்றங்கள் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.