- Home
- உடல்நலம்
- Healthy Drinks : ஆபீஸ்ல தூக்கம் வருதா? சுறுசுறுப்பா வேலை பார்க்க உதவும் 5 ஹெல்தி டிரிங்க்ஸ்
Healthy Drinks : ஆபீஸ்ல தூக்கம் வருதா? சுறுசுறுப்பா வேலை பார்க்க உதவும் 5 ஹெல்தி டிரிங்க்ஸ்
ஆபீஸில் நீங்கள் தூக்காமல் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமானால் டீ, காபிக்கு பதிலாக எனர்ஜி தரும் ஹெல்தியான 5 வகை ட்டிரிங்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
வேலையில் புத்துணர்ச்சி தரும் ஆரோக்கிய பானங்கள்
ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கொஞ்ச நேரம் பிரேக் எடுத்து வெளியே சென்று கடையில் டீ, காபி குடிக்கும் நம்மில் பலருக்கும் உண்டு. சில நிறுவனங்களிலேயே டீ, காபி கிடைக்கும். ஆனால் நீங்கள் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக எனர்ஜியாக வேலை செய்ய 5 வகையான ஹெல்தி ட்டிரிங்ஸ் உள்ளன. இந்த ட்ரிங்க்ஸ் ஹோம் மேட் என்பதால் ஆபீஸில் தூங்காமல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவும். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
மோர் :
மோர் உங்களை நாள் முழுவதும் ஆற்றலாகவும், எனர்ஜியாகவும் வைக்க உதவும். அதுமட்டுமில்லாமல் இது குடலை ஆரோக்கியமாக வைக்கவும், ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை குறைக்கவும் உதவும்.
நெல்லிக்காய் ஜூஸ் :
இந்த ஜூஸ் தயாரிக்க 2-3 நெல்லிக்காயை கொட்டையில்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்ந்து நன்றாக அரைக்கவும். இந்த ஜூஸை சில்வர் அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஆஃபீஸுக்கு எடுத்து செல்லுங்கள். பிரேக் சமயத்தில் இதை குடியுங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும், கறிவேப்பிலையில் இரும்புச்சத்தும் உள்ளன. இஞ்சி தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும். இந்த மூன்றும் கலந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் புத்துணர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
எலுமிச்சை நீர் :
ஆபீஸில் சுறுசுறுப்பாக வேலை செய்ய எலுமிச்சை நீர் உங்களுக்கு உதவும். இதற்கு ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த பானத்தை நீங்கள் சிறிய பாட்டிலில் எடுத்து செல்லலாம். எலுமிச்சை நீர் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
கறிவேப்பிலை ஜூஸ் :
உடலில் போதுமான சத்து இல்லையென்றால் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வீர்கள். எனவே ஆபீஸில் நீங்கள் புத்துணர்ச்சியாக வேலை செய்ய விரும்பினால் கருவேப்பிலை ஜூஸ் சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு அரை கைப்பிடி கருவேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீரின் நிறம் நன்றாக மாறியதும் அதை வடிகட்டி அதனுடன் ரெண்டு துளி நெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சூப்பு போல குடியுங்கள்.
இலவங்கப்பட்டை நீர் :
ஆபீஸ் பிரேக் டைமில் குளிர்ச்சியான பானம் ஏதாவது குடிக்க விரும்பினால் இலவங்கப்பட்டை நீர் சிறந்த தேர்வு. ஒரு கிளாஸ் சூடான நீரில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து குடிக்கலாம். இனிப்புக்கு தேன் கூட சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு இதமாக இருக்கும். ஆபீஸில் நீங்கள் செல்லும்போது ஒரு சிறிய டப்பாவில் இலவங்கப்பட்டை பொடி எடுத்துக் கொள்ளுங்கள். டீ, காபி குடிக்கும் சமயத்தில் இந்த நீரை தயாரித்து குடியுங்கள்.