- Home
- Lifestyle
- Healthy Drinks: கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்...5 சிறந்த ஜூஸ்...இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..?
Healthy Drinks: கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்...5 சிறந்த ஜூஸ்...இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..?
Healthy Drinks: கல்லீரலை சுத்தம் செய்ய உதவும், ஆரோக்கியமான ஜூஸ் வகைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Healthy Drinks:
கல்லீரல் நமது உடலில் செயல்படும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். ஏனெனில், நமது வாழ்நாளை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ள இந்த உறுப்பு ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிப்பட்ட கல்லீரலை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
Healthy Drinks:
தவறான உணவுப் பழக்கம், அதிக உடல் எடை, அதிக மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். அப்படி, கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும். அந்த வகையில் இன்று கல்லீரல் சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Healthy Drinks:
பீட்ரூட் ஜுஸ்:
பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நமது உணவில் அவசியம் சேர்த்து கொண்டால் எண்ணற்ற பயன்கள் உண்டு.இதில் நார்ச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் பித்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதனால் நம் உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை விரட்டும். பீட்ரூட் ஜுஸ் கல்லீரலுக்கு சிறந்த ஒன்றாகும்.
Healthy Drinks:
நாவல் பழத்தின் ஜூஸ்:
நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகளை நீக்குகிறது. சிறுநீர் பிரச்சனையை சரி செய்கிறது. நாவல் பழத்தின் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் கற்களானது கரைந்துவிடும். நாவல் பழம் நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
Healthy Drinks:
நெல்லிக்காய் சாறு:
நெல்லிக்காய் சாறுவில் இருக்கும், வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. சரியான அளவுகளில் நெல்லிக்காய் சாறு எடுத்து கொண்டால் கல்லீரலில் எந்தவித கட்டிகளும் உருவாகாது எனவும், நச்சுக்கள் சேராது பாதுகாப்பாக பார்த்து கொள்ளும்.
Healthy Drinks:
இஞ்சி லெமன் டீ:
லெமன் டீ அனைவருக்கு பிடித்தமான ஒன்றாகும். அதில், கொஞ்சம் இஞ்சி சேர்த்து குடிக்கும் போது உடலுக்கு நன்மை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, கல்லீரலில் படிந்துள்ள நச்சுக்களை அகற்ற கூடும். குறிப்பாக உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.