MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Health Issues : பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக புறக்கணிக்கக் கூடாத 4 முக்கிய ஆரோக்கியப் பிரச்சினைகள்!

Health Issues : பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக புறக்கணிக்கக் கூடாத 4 முக்கிய ஆரோக்கியப் பிரச்சினைகள்!

இன்றைய கணினி பணிச்சூழலில் அமர்ந்தே வேலை செய்யும் ஊழியர்கள் சந்திக்கும் 4 முக்கிய உடல்நலப் பிரச்சினைகள் எவை? அவற்றின் அறிகுறிகள் மற்றும் ஆரம்பத்திலேயே தற்காத்துக் கொள்ளும் எளிய வழிமுறைகளை மருத்துவர்களின் ஆலோசனையோடு விரிவாக அறிந்து கொள்ளுங்கள்!

2 Min read
Author : Priya Velan
Published : Jul 27 2026, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு :
Image Credit : Getty

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு :

வேலைக் பளு, இலக்குகள், இரவு நேர வேலை மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையின்மை (Work-Life Imbalance) ஆகியவை கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதை கவனிக்காமல் விட்டால் அது 'ஆங்ஸைட்டி' (Anxiety) மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.

அறிகுறி: எப்போதும் சோர்வாக உணர்வது, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, காரணமில்லாத எரிச்சல் மற்றும் பதற்றம்.

தீர்வு: பணி நேரத்திற்குப் பிறகு வேலையிலிருந்து மனதளவில் விலகி இருக்கப் பழக வேண்டும். தினமும் தியானம், மூச்சுப் பயிற்சி மற்றும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மனதை அமைதிப்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து வலி :
Image Credit : Getty

முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து வலி :

ணினி அல்லது லேப்டாப் முன் தினமும் 8 முதல் 10 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், தவறான அமரும் நிலை (Bad Posture) ஏற்படுகிறது. இதனால் கழுத்து, தோள்பட்டை மற்றும் கீழ் முதுகில் கடுமையான வலி உருவாகிறது.

அறிகுறி: தொடர்ச்சியான கழுத்து பிடிப்பு, முதுகு வலி மற்றும் கை, கால்களில் மரத்துப்போகும் உணர்வு.

தீர்வு: 45 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையிலிருந்து எழுந்து சிறிய நடைப்பயிற்சி செய்ய வேண்டும். பணிபுரியும் நாற்காலி மற்றும் மேசையை சரியான 'எர்கோனாமிக்' (Ergonomic) அமைப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Related Articles

Related image1
Fatty Liver: கல்லீரல் கொழுப்பைக் குறைக்கும் 5 அஞ்சறைப் பெட்டி மசாலாக்கள்!
Related image2
Protein deficiency: உங்கள் உடலில் புரதச்சத்து குறைவாக உள்ளது என்பதை காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்!
34
கண் சோர்வு மற்றும் தலைவலி :
Image Credit : Getty

கண் சோர்வு மற்றும் தலைவலி :

தொடர்ச்சியாகத் திரையைப் பார்ப்பதால் 'டிஜிட்டல் ஐ ஸ்டிரைன்' (Digital Eye Strain) ஏற்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மற்றும் நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பது செரிமான மண்டலத்தைப் பாதித்து அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.

அறிகுறி: கண் எரிச்சல், தலைவலி, உலர் கண்கள், வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல்.

தீர்வு: கண்களுக்கு '20-20-20 விதியை'ப் பின்பற்றவும் (ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்). நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, சத்துள்ள உணவு மற்றும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

44
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் :
Image Credit : Getty

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் :

உடற்பயிற்சியின்மை மற்றும் துரித உணவுகள் (Junk Foods) உண்பதால், இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் (High BP) மற்றும் நீரிழிவு (Diabetes) நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

அறிகுறிகள்: அடிக்கடி தாகம், காரணமில்லாத உடல் எடை மாற்றம், தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல்.

தீர்வு: காரம் மற்றும் உப்பு குறைந்த சத்தான உணவுகளைச் சேர்ப்பது, தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tech Neck : போன், லேப்டாப் பயன்பாட்டால் கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு ஏற்படும் பாதிப்புகள்!
Recommended image2
Olive Oil: ஆலிவ் ஆயிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!
Recommended image3
Oil-Free Poori: தண்ணியில பூரி சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா?!!
Related Stories
Recommended image1
Fatty Liver: கல்லீரல் கொழுப்பைக் குறைக்கும் 5 அஞ்சறைப் பெட்டி மசாலாக்கள்!
Recommended image2
Protein deficiency: உங்கள் உடலில் புரதச்சத்து குறைவாக உள்ளது என்பதை காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved