- Home
- உடல்நலம்
- உணவு
- உங்க குழந்தைக்கு டீ, காபி கொடுத்து பழக்கப்படுத்துறீங்களா? நிபுணர்கள் கொடுக்கும் ஷாக்.. இதை படிங்க!
உங்க குழந்தைக்கு டீ, காபி கொடுத்து பழக்கப்படுத்துறீங்களா? நிபுணர்கள் கொடுக்கும் ஷாக்.. இதை படிங்க!
Children's Health: உங்க குழந்தைக்கு தினமும் டீ, காபி கொடுத்து பழக்கப்படுத்துறீங்களா? இது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க குழந்தைக்கு டீ, காபி கொடுத்து பழக்கப்படுத்துறீங்களா?
நம் ஊரில் பல பேருக்கு காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. சிலருக்கு பெட் காபி, சிலருக்கு டிபனுடன் சேர்த்து காபி, இன்னும் சிலருக்கு அலுவலக இடைவேளையில் எல்லாம் டீ, காபி குடிக்கிற பழக்கம் இருக்கும். வீட்டில் பெரியவர்கள் செய்வதைப் பார்த்துதான் குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள்.
எல்லாரும் டீ, காபி குடிக்கும்போது, அது எப்படி இருக்கும் என்று டேஸ்ட் பண்ணிப் பார்க்க குழந்தைகளுக்கும் ஆசை வரும். அப்புறம் மெதுவாக அவர்களும் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில வீடுகளில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு டீ, காபி கொடுத்து பழக்கப்படுத்துவார்கள்.
ஆனால், சின்ன வயதிலேயே டீ, காபி குடிப்பது அவர்களின் உடம்புக்கு ரொம்பவே கெடுதல். ஏனென்றால், இதில் இருக்கிற 'டானின்' (Tannin) என்கிற சத்து, குழந்தைகளின் உடம்பில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து சேருவதைத் தடுக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் டீ, காபி குடிப்பதால் வரும் பாதிப்புகள்
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்: குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு நோயை எதிர்க்கிற சக்தி ரொம்ப முக்கியம். சத்தான உணவுகள் மூலமாகத்தான் இந்த சக்தி கிடைக்கும். ஆனால், டீ, காபி குடிக்கும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவே வீக்காகிவிடும். இதனால் செரிமானப் பிரச்சினைகள் வந்து, உடம்பை உள்ளுக்குள்ளேயே கெடுத்துவிடும்.
கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு: டீ, காபியில் இருக்கிற டானின், உடம்பில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து சேருவதைத் தடுக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தசோகை வரலாம். எலும்புகள் பலவீனமாகி, சின்ன வயதிலேயே மூட்டு வலி, கை கால் வலி எல்லாம் வர ஆரம்பித்துவிடும்.
மூளை ஆரோக்கியம் பாதிக்கும்
டீ, காபியில் 'கஃபீன்' (Caffeine) இருக்கிறது. இது நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். அதனால்தான் இரவு விழித்து வேலை செய்பவர்கள் இதை அதிகமாகக் குடிக்கிறார்கள். ஆனால், இந்த கஃபீன் குழந்தைகளின் ஆரோக்கியத்தை ரொம்பவே பாதிக்கும். இதைக் குடிக்கும்போது குழந்தைகளுக்கு தூக்கமின்மை, கோபம், எரிச்சல் என்று மனதளவில் நிறைய மாற்றங்கள் வரும். இதனால் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி இரண்டுமே தடைபடும்.
அசிடிட்டி பிரச்சனை: அளவுக்கு அதிகமாக டீ, காபி குடித்தால் பற்களில் சொத்தை வருவதோடு, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் வரும். முக்கியமாக பசி எடுக்காது. பசி இல்லை என்றால் குழந்தைகள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். இதனால் அசிடிட்டி பிரச்சினை வந்து, உடம்புக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
உடல் எடையை அதிகரிக்கும்
குழந்தைகள் டீ, காபி குடிப்பதால் அவர்களின் குடல் பகுதியில் அமிலத்தன்மை அதிகரித்து, நெஞ்சு எரிச்சல், உணவு எதுக்களிப்பு மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். மேலும், காபியில் உள்ள கஃபைன் மற்றும் அதிகப்படியான சர்க்கரை கலவை குழந்தைகளின் இதயத் துடிப்பை அதிகரித்து, படபடப்பு மற்றும் மனப்பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, தேவையில்லாமல் உடல் எடையை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
ஆகவே எந்த ஒரு உணவாக இருந்தாலும் அளவாகச் சாப்பிட்டால் உடம்புக்கு எந்தக் கெடுதலும் வராது. அதே மாதிரிதான் டீ, காபியும். குழந்தைகளுக்கு வாரத்துக்கு இரண்டு கப்புக்கு மேல் டீ, காபி கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுத்தாலும் ரொம்ப லைட்டாக, பால் அதிகமாகச் சேர்த்து கொடுங்கள். ஸ்ட்ராங்கான டீ, காபியை குழந்தைகளுக்குக் கண்டிப்பாகக் கொடுக்காதீர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

