- Home
- உடல்நலம்
- உணவு
- Wheat Gulab Jamun: மைதா, கோவா வேண்டாம்... கோதுமை மாவில் சாஃப்ட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
Wheat Gulab Jamun: மைதா, கோவா வேண்டாம்... கோதுமை மாவில் சாஃப்ட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
Wheat Flour Gulab Jamun Recipe : மைதா மாவு உடம்புக்கு ஆகாதுன்னு நினைக்கிறீங்களா? கவலையை விடுங்க. வீட்ல இருக்கிற கோதுமை மாவு, பால் பவுடர் வெச்சு ரொம்ப ஈஸியா, சாஃப்டான குலாப் ஜாமூன் செய்யலாம்.

Gulab Jamun Without Maida
குலாப் ஜாமூன் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? ஆனா, மைதா மாவு உடம்புக்கு கெடுதல்னு நிறைய பேர் இதை சாப்பிட யோசிப்பாங்க. இனி அந்த கவலை வேண்டாம். நம்ம வீட்ல இருக்கிற கோதுமை மாவை வெச்சே ஜூஸியான, சாஃப்ட் ஜாமூன் சூப்பரா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு: 1/2 கப் (அரை கப்)
பால் பவுடர்: 1/2 கப்
நெய்: 2 டீஸ்பூன்
பால்: 1/4 கப் (மாவு பிசைய)
பேக்கிங் சோடா : 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்: 1/2 டீஸ்பூன்
உப்பு: 1 சிட்டிகை
எண்ணெய் அல்லது நெய்: பொரிக்க தேவையான அளவு
சர்க்கரை பாகு செய்ய
சர்க்கரை: 1 கப்
தண்ணீர்: 3/4 கப் (முக்கால் கப்)
ஏலக்காய் தூள்: சிறிதளவு
செய்முறை
1. மாவு ரெடி பண்ணுங்க
ஒரு பாத்திரத்துல கோதுமை மாவு, பால் பவுடர், ஒரு சிட்டிகை ஆப்ப சோடா, ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நல்லா சலிச்சுக்கோங்க (இப்படி சலிக்கும்போது மாவு லேசாகும்). இப்போ இதுல 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, மாவோட எல்லா இடத்துலயும் படுற மாதிரி கையால நல்லா கலந்து விடுங்க. அடுத்து கொஞ்சம் கொஞ்சமா பால் சேர்த்து, சப்பாத்தி மாவை விட ரொம்ப சாஃப்டா பிசைஞ்சுக்கோங்க. மாவை ரொம்ப அழுத்தி பிசையக் கூடாது. பிசைஞ்ச மாவை ஒரு 15 நிமிஷம் மூடி வைங்க.
2. சர்க்கரை பாகு ரெடி பண்ணுங்க
ஒரு பாத்திரத்துல 1 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைங்க. சர்க்கரை முழுசா கரைஞ்சு, பாகு கையில தொட்டா லேசா பிசுபிசுன்னு வந்தா போதும். கடைசியா ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை ஆஃப் பண்ணிட்டு, பாகை வெதுவெதுப்பா வெச்சுக்கோங்க.
3. ஜாமூன் பொரிச்சு எடுங்க
ஊறின மாவுல இருந்து சின்ன சின்ன உருண்டைகளா பிடிச்சுக்கோங்க. உருண்டைகள்ல எந்த விரிசலும் இருக்கக் கூடாது. கடாயில எண்ணெய் அல்லது நெய் ஊத்தி மிதமா சூடு பண்ணுங்க. அடுப்பை சிம்மில் வெச்சுக்கோங்க. மெதுவா உருண்டைகளை எண்ணெயில போட்டு, எல்லா பக்கமும் ஒரே மாதிரி பொன்னிறமா வர்ற வரைக்கும் பொரிச்சு எடுங்க.
4. பாகுல ஊற வைங்க
பொரிச்ச சூடான ஜாமூன்களை, வெதுவெதுப்பான சர்க்கரை பாகுல போடுங்க. பாகுலயே ஜாமூன்களை 3 முதல் 4 நிமிஷம் வரைக்கும் சிம்மில் கொதிக்க வைங்க. அப்புறம் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு 15 முதல் 20 நிமிஷம் மூடி வைங்க. இப்போ கோதுமை மாவு ஜாமூன்கள் பாகை நல்லா உறிஞ்சி டபுள் சைஸ் ஆகி, வாயில வெச்சா கரையுற அளவுக்கு சாஃப்டா ரெடியாகி இருக்கும்!
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஆப்ப சோடா அதிகமா வேண்டாம்
ஆப்ப சோடாவை ஒரு சிட்டிகை மட்டும் தான் சேர்க்கணும். சோடா அதிகமானா, எண்ணெயில போட்ட உடனே ஜாமூன் உடைஞ்சு தூளாயிடும். ரொம்ப குறைஞ்சா, ஜாமூன் உள்ளே கல்லு மாதிரி ஆயிடும்.
சப்பாத்தி மாவு மாதிரி பிசையாதீங்க
கோதுமை மாவுல பிசுபிசுப்புத் தன்மை (Gluten) இருக்கிறதால, ரொம்ப அழுத்தி பிசைஞ்சா ஜாமூன் ரப்பர் மாதிரி ஆயிடும். விரல் நுனியால மட்டும் ரொம்ப லேசா, சாஃப்டா பிசைஞ்சுக்கோங்க.
நைசான கோதுமை மாவு யூஸ் பண்ணுங்க
மாவுல தவிடு (ரவை மாதிரி) இருக்கக் கூடாது. அதனால மாவு, பால் பவுடர் ரெண்டையும் சன்னமான சல்லடையில 2 தடவை சலிச்சுட்டு யூஸ் பண்ணா, உருண்டை பிடிக்கும்போது விரிசல் வராது.
இதை முக்கியமா கவனிக்கணும்
கோதுமை மாவு சீக்கிரம் கருகிடும்
மைதாவை விட கோதுமை மாவு எண்ணெயில சீக்கிரமா நிறம் மாறிடும். அதனால எண்ணெய் சூடானதும் அடுப்பை முழுசா குறைச்சுட்டு, மெதுவா பொரிங்க. இல்லைனா மேல கருகி, உள்ளே வேகாம அப்படியே இருக்கும்.
பாகுல 3 நிமிஷம் கொதிக்க வைக்கிற சீக்ரெட் ட்ரிக்
மைதா அல்லது கோவா கூட ஒப்பிடும்போது, கோதுமை மாவு பாகை ரொம்ப மெதுவா தான் உறிஞ்சும். அதனாலதான் பொரிச்ச ஜாமூன்களை பாகுல போட்டதும், 2 முதல் 3 நிமிஷம் சிம்மில் கொதிக்க வைக்கணும். அப்போதான் பாகு ஜாமூனுக்கு உள்ளே வரைக்கும் நல்லா இறங்கும்.
சர்க்கரை பாகு கெட்டியாகாம இருக்க
பாகு கொதிச்சு அடுப்பை ஆஃப் பண்ணதும், அதுல 3-4 சொட்டு எலுமிச்சை சாறு பிழிஞ்சு விடுங்க. இப்படி செஞ்சா பாகு ஆறுனாலும் சர்க்கரை கெட்டியாகாது.

