MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Gulab Jamun : வாயில் போட்டதும் கரையும் குலாப் ஜாமூன்: ஸ்வீட் கடை ஸ்டைலில் வீட்டிலேயே செய்ய சீக்ரெட் டிப்ஸ்!

Gulab Jamun : வாயில் போட்டதும் கரையும் குலாப் ஜாமூன்: ஸ்வீட் கடை ஸ்டைலில் வீட்டிலேயே செய்ய சீக்ரெட் டிப்ஸ்!

Soft Gulab Jamun Recipe : வாயில் போட்டதும் அப்படியே கரையும் சாஃப்டான குலாப் ஜாமூன் செய்ய ஆசையா? ஸ்வீட் கடைகளில் கிடைப்பது போல விரிசல் இல்லாமல், மிருதுவாக வீட்டிலேயே செய்ய சீக்ரெட் டிப்ஸ் இதோ.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 20 2026, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gulab Jamun Receipe
Image Credit : Asianet News

Gulab Jamun Receipe

குலாப் ஜாமூன் சாப்பிட ஆசை வரும்போதெல்லாம் இனி கடைகளுக்குப் போக வேண்டாம். கடைகளில் விற்கும் அதே சுவையில், அதே சாஃப்ட்னஸுடன் வீட்டிலேயே ஈஸியாக குலாப் ஜாமூன் செய்யலாம். இதற்கு பெரிய அளவில் பொருட்கள் தேவையில்லை. கோவா, மைதா, கொஞ்சம் பேக்கிங் சோடா, சர்க்கரை என வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை வைத்தே ஸ்வீட் கடையில் கிடைக்கும் குலாப் ஜாமூனை இனி வீட்டிடேலே செஞ்சு அசத்தலாம். அது எப்படி செய்வது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bread Gulab Jamun : இந்த தீபாவளிக்கு பிரெட்டில் குலாப் ஜாமூன் செய்து பாருங்கள்! டேஸ்ட் சும்மா அள்ளும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜாமூன் செய்வது எப்படி
Image Credit : MadhurasRecipe Marathi

ஜாமூன் செய்வது எப்படி

சரியான அளவில் கோவா, மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்ப்பதுதான் ஜாமூனை சாஃப்டாக மாற்றும் ரகசியமாம். சுவைக்காக ஏலக்காய் பொடி அல்லது குங்குமப்பூவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

குலாப் ஜாமூன் தேவையான பொருட்கள்: பால் கோவா - 1 கிலோ, மைதா - 100 கிராம், பேக்கிங் சோடா - தேவையான அளவு, ஏலக்காய் பொடி - தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பொரிக்க எண்ணெய் அல்லது நெய், சர்க்கரை (ஜீரா செய்ய).

35
செய்முறை
Image Credit : Asianet News

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ பால் கோவாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு 100 கிராம் மைதா சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு தேவையான அளவு பேக்கிங் சோடா சேர்த்து, கோவா - மைதா கலவையை மிருதுவான மாவாகப் பிசையவும். பேக்கிங் சோடாவை அதிகமாகச் சேர்க்காமல் சரியான அளவில் சேர்ப்பது முக்கியம். வாசனைக்காக ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூவை இந்த மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

45
இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க
Image Credit : Gemini | AI Generated

இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க

மாவு தயாரானதும், கைகளில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக்கொண்டு சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். எல்லா உருண்டைகளும் ஒரே அளவில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் எண்ணெயில் பொரிக்கும்போது எல்லாம் ஒரே மாதிரி வேகும். உருண்டைகளில் எந்த விரிசலும் இல்லாமல், வழுவழுப்பாக உருட்டுவது மிக முக்கியம்.

இப்போது கடாயில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கவும். எண்ணெய் அதிக சூடாகாமல் இருக்க அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஜாமூன் உருண்டைகளை மெதுவாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை பொரிக்கவும். அதிக தீயில் பொரித்தால், வெளியே சீக்கிரம் கருகிவிடும், உள்ளே மாவு வேகாது. பொன்னிறமாக வெந்ததும், அவற்றை எடுத்து ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகில் (ஜீரா) போடவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஜாமூன்கள் பாகில் ஊற வேண்டும். அப்போதுதான் ஜாமூன் ஜீராவை நன்றாக உறிஞ்சி, உள்ளே இனிப்பாகவும் சாஃப்டாகவும் மாறும்.

55
டிப்ஸ்
Image Credit : Diana Chistruga/Instagram

டிப்ஸ்

பசும்பாலில் செய்த கோவாவைப் பயன்படுத்தினால் குலாப் ஜாமூன் இன்னும் சுவையாக இருக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். கடைகளில் கிடைக்கும் குலாப் ஜாமூன் மாவு போன்ற ரெடிமேட் பொருட்களை வைத்தும் ஜாமூன் செய்யலாம். ஆனால், அப்படிச் செய்யும் இனிப்புகளை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. இந்த சிம்பிளான டிப்ஸ்களை ஃபாலோ செய்தால், நீங்களும் வீட்டிலேயே சூப்பரான குலாப் ஜாமூன் செய்யலாம்!

Gulab Jamun : தீபாவளி ஸ்வீட் டிப்ஸ்... விரிசல் இல்லாத சாஃப்டான குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீபாவளி பண்டிகை
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ghee Shelf Life: நெய்யை இத்தனை மாதங்களா வீட்டில் வச்சிருக்கீங்க? கெட்டுப்போனதை எப்படி கண்டுபிடிப்பது
Recommended image2
பொன்னி vs சீரக சம்பா: பிரியாணி குழையாமல் மணமணக்கணுமா? எந்த அரிசி பெஸ்ட் சாய்ஸ்?
Recommended image3
உடல் பருமனால் 17 கோடி குழந்தைகள் பாதிப்பு: பெற்றோர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
Related Stories
Recommended image1
Lemon Peel Candy: எலுமிச்சைத் தோலை இனி தூக்கிப் போடாதீங்க..! ஸ்வீட் மிட்டாய் முதல் இத்தனை பயன்களா..?
Recommended image2
நேந்திரம்பழம் இருக்கா? 10 நிமிடத்தில் நாவில் கரையும் தித்திப்பான ஸ்வீட் சப்பாத்தி - ஈஸி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved