- Home
- உடல்நலம்
- உணவு
- நேந்திரம்பழம் இருக்கா? 10 நிமிடத்தில் நாவில் கரையும் தித்திப்பான ஸ்வீட் சப்பாத்தி - ஈஸி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்!
நேந்திரம்பழம் இருக்கா? 10 நிமிடத்தில் நாவில் கரையும் தித்திப்பான ஸ்வீட் சப்பாத்தி - ஈஸி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்!
நன்கு பழுத்த நேந்திரம்பழம் (ஏத்தப்பழம்), துருவிய தேங்காய், நாட்டுச் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைச் சேர்த்து வெறும் 10 நிமிடங்களில் மிக எளிதாகச் செய்யக்கூடிய சத்தான பலகாரமே இந்த நேந்திரம்பழ ஸ்வீட் சப்பாத்தி.

10 நிமிடத்தில் நாவில் கரையும் தித்திப்பான ஸ்வீட் சப்பாத்தி
வாழைப்பழமும் தேங்காயும் சேர்ந்த ஒரு சத்தான, அதே சமயம் நாவில் கரையும் சுவையான உணவை ரொம்பக் குறைவான நேரத்துல செஞ்சு அசத்தணுமா? சமையலில் பெரிய அனுபவம் இல்லாதவங்க கூட கண்ணை மூடிக்கிட்டு ஈஸியா செய்யக்கூடிய ஒரு அருமையான ஏத்தப்பழ ஸ்வீட் சப்பாத்தி ரெசிபி இதோ! காலையில் அவசர அவசரமாகக் கிளம்பும்போதோ அல்லது மாலையில் டீ குடிக்கும் நேரத்தில் மொறுமொறுப்பாகவும் இனிப்பாகவும் எதாவது சாப்பிடத் தோணும்போதோ செய்து கொடுக்க இது ஒரு சூப்பரான சாய்ஸ்.
தித்திப்பான ஸ்வீட் சப்பாத்தி - தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த நேந்திரம்பழம்
கோதுமை மாவு
துருவிய தேங்காய்
நாட்டுச் சர்க்கரை
உப்பு
நெய்
தண்ணீர்
செய்முறை - 1
முதலில் நன்றாகப் பழுத்த நேந்திரம்பழத்தின் தோலை உரித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பிறகு ஒரு கரண்டி அல்லது பொட்டேட்டோ மேஷர் வச்சு பழத்தை நல்லா கட்டிகள் இல்லாம மசித்து எடுத்துக்கோங்க. மசித்து வைத்த பழத்தோடு துருவிய தேங்காய், நாட்டுச் சர்க்கரை, கோதுமை மாவு , சுவையைத் தூக்கிக் காட்ட ஒரே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கைகளால் நன்றாகக் கலந்து விட வேண்டும். அடுத்து, இதனுடன் தேவையான அளவு தண்ணீரைச் சிறுகச் சிறுகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள். இதன் பதம் எப்படி இருக்க வேண்டும் என்றால், வழக்கமான தோசை மாவை விட சற்று கெட்டியாகவும், சப்பாத்தி மாவை விடக் கொஞ்சம் தளர்வாகவும் இருக்க வேண்டும். இப்போது ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும், சுற்றிலும் சிறிதளவு நெய் தடவிக்கொள்ளுங்கள்.
செய்முறை - 2
நாம் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒரு கரண்டி எடுத்து, தோசைக் கல்லில் ஊற்றித் திக்காக லேசாகப் பரப்பி விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் நல்ல பொன்னிறமாக வெந்து, நெய்யின் மணம் கமழ வரும் வரை திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்தால் போதும். சுடச்சுட நாவில் கரையும் தித்திப்பான ஏத்தப்பழ ஸ்வீட் சப்பாத்தி தயார்! குழந்தைகள் பள்ளி முடிந்து பசியோடு வீட்டுக்கு வரும்போது செய்து கொடுக்கவோ, திடீரென வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு சட்டுபுட்டுனு ஒரு ஸ்வீட் செய்து அசத்தவோ இது அருமையான பலகாரம். ஏத்தப்பழத்தின் இயற்கையான இனிப்பும், வதங்கும் நெய்யின் நறுமணமும் சேர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் தட்டைக் காலி பண்ண வச்சிடும். இன்னைக்கே உங்க வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணிப் பாருங்க!

