அந்த ஸ்பெஷல் ரெசிபி என்னன்னா முருங்கைக்கீரை அல்வா. ஆமாங்க, இந்த அல்வா ஆரோக்கியமானது மட்டுமில்ல, சாப்பிடவும் ரொம்பவே டேஸ்டியா இருக்கும். எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
Image credits: Getty
Tamil
ஸ்டெப் 1
முதல்ல முருங்கைக்கீரைய எடுத்து நல்லா கழுவி ஒரு பாத்திரத்துல வைங்க. முடிஞ்ச வரைக்கும் சின்ன காம்புகள கூட நீக்கிடுங்க.
Image credits: Getty
Tamil
ஸ்டெப் 2
இப்போ கீரைய தண்ணியில போட்டு கொதிக்க வைங்க. பத்து நிமிஷம் கழிச்சு தண்ணிய வடிகட்டிட்டு, கீரைய மட்டும் மிக்ஸியில போட்டு நைசான பேஸ்ட்டா அரைச்சுக்கோங்க.
Image credits: Asianet News
Tamil
ஸ்டெப் 3
இப்போ ஒரு கடாய எடுத்து அதுல கொஞ்சம் நெய் ஊத்தி, அரைச்சு வச்சிருக்க முருங்கைக்கீரை பேஸ்ட்ட போட்டு நல்லா மிக்ஸ் பண்ணுங்க.
Image credits: Getty
Tamil
ஸ்டெப் 4
நினைவுல வச்சுக்கோங்க, அல்வா செய்யும்போது அடுப்பு மிதமான தீயில இருக்கணும். கீரையோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்குங்க.
Image credits: social media
Tamil
ஸ்டெப் 5
இப்போ இந்த கலவையில கொஞ்சம் பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைங்க. பாலும் சர்க்கரையும் சேர்ந்து நல்லா கெட்டியாகி வர்ற வரைக்கும் கைவிடாம கிளறுங்க.
Image credits: Asianet News
Tamil
ஸ்டெப் 6
கடைசியா இந்த கலவையில ஏலக்காய் தூள், நெய்யில வறுத்த முந்திரி, பாதாம், உலர் திராட்சை சேர்த்துக்கோங்க. இதனால சுவை இன்னும் கூடும்.
Image credits: Asianet News
Tamil
சுடச்சுட பரிமாறுங்க
இப்போ ரெடியான முருங்கைக்கீரை அல்வாவை சுடச்சுட பரிமாறுங்க. இத ஆறிய பிறகும் சாப்பிடலாம், ரொம்ப டேஸ்டியா இருக்கும். இன்னைக்கே ட்ரை பண்ணிப் பாருங்க.