ஒமேகா-3 இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
health-food Sep 22 2026
Author: Ganesh A Image Credits:Getty
Tamil
ஆளிவிதை
ஆளிவிதைகளில் ஏஎல்ஏ (ALA) சத்து அதிக அளவில் உள்ளது. நீங்கள் 2 டேபிள்ஸ்பூன் ஆளிவிதைகளை சாப்பிட்டால் 4.7 கிராம் ஒமேகா-3 சத்து கிடைக்கும்.
Image credits: social media
Tamil
சியா விதைகள்
சியா விதைகளில் ஏஎல்ஏ (ALA) சத்து நிறைந்துள்ளது. 1 அவுன்ஸ் சியா விதைகளில் 5 கிராம் ஒமேகா-3 உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் இதயத்திற்கு மிகவும் நல்லது.
Image credits: Getty
Tamil
வால்நட்
வால்நட் பருப்புகளில் ஏஎல்ஏ (ALA) சத்து கணிசமான அளவில் உள்ளது. மேலும் இதில் பாலிபினால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் அடங்கியுள்ளன.
Image credits: Getty
Tamil
மீன் வகைகள்
மத்தி, காணாங்கெளுத்தி, சால்மன், சூரை மற்றும் சிறிய வகை மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
Image credits: Getty
Tamil
சோயாபீன்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த மற்றொரு சிறந்த உணவு சோயாபீன். சோயா சார்ந்த உணவுகளை நாம் சாப்பிடுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
Image credits: Getty
Tamil
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள், குறிப்பாக ஆல்ஃபா-லினோலெனிக் ஆசிட் (ALA) உள்ளது. இது குறைந்த அளவில் இருந்தாலும் உடலுக்கு நல்ல பலன்களை தருகிறது.