தினமும் கிவி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
கிவியில் ஆக்டினிடின் என்ற என்சைம் உள்ளது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.
கிவி பழம் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க இது உதவுகிறது.
வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள் கிவியில் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
இதில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் சத்துக்கள், வயதாவதால் ஏற்படும் கண் பார்வை குறைபாடுகளில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன.
கிவியில் வைட்டமின் கே சத்து உள்ளது. இது கால்சியத்தை உறிஞ்சி, எலும்புகளை உறுதியாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது.
குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்ட கிவி பழம், அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இரவு தூங்குவதற்கு முன் கிவி பழம் சாப்பிட்டால், நல்ல ஆழ்ந்த மற்றும் தரமான தூக்கம் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
Sesame Seeds: தினமும் எள் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
Thick Hair : அடர்த்தியான முடி வளர சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 சூப்பர் உணவுகள்
Vitamin C Foods: வைட்டமின் சி அள்ளித் தரும் 7 சூப்பர் உணவுகள்!