MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Hot Drinks: சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்க‌? தொண்டையை பதம் பார்க்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

Hot Drinks: சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்க‌? தொண்டையை பதம் பார்க்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

Hot Drinks Cancer Risk:அதிக சூடான பானங்களை குடிப்பது உணவுக்குழாயை சேதப்படுத்தி, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 09 2026, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்க‌?
Image Credit : Getty

சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்க‌?

அதிக சூடான பானங்கள் குடிப்பது உணவுக்குழாயை சேதப்படுத்தி, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என ஆய்வு கூறுகிறது. டீ, காபி போன்றவற்றை அதிக சூட்டில் தொடர்ந்து குடிப்பது 'உணவுக்குழாய் புற்றுநோய்' (esophageal cancer) அபாயத்தை அதிகரிக்கும் என UK ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 10 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் அதிகம்
Image Credit : Getty

உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் அதிகம்

இந்த ஆய்வில், 'மிதமான சூட்டில்' டீ அல்லது காபி குடிப்பவர்களை விட, 'அதிக சூடாக' குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வரும் அபாயம் சுமார் மூன்று மடங்கு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. கொதிக்கும் திரவம் வயிற்றுக்குச் செல்லும் வழியில், உணவுக்குழாயின் உள் சுவரில் உள்ள செல்களை சேதப்படுத்தக்கூடும்.

Related Articles

Related image1
summer tips சம்மரில் ஒரு நாளைக்கு எத்தனை டீ, காபி குடிக்கலாம்? 6 ஹெல்த் டிப்ஸ்!
Related image2
Best Summer Drinks : கோடையில் டீ, காபி குடிக்கிறீங்களா? உடல் சூட்டை குறைக்கும் 5 சூப்பர் பானங்கள் இதோ
37
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள்
Image Credit : google

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள்

'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர்' இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர். 65 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலை கொண்ட பானங்களை "மிகவும் சூடானவை" என்றும், அவை உடல்நலத்திற்கு ஆபத்தானவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தினமும் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சூடான பானங்கள் குடிப்பது இந்த அபாயத்தை அதிகரிக்கிறது.
47
ஆய்வு முடிவு சொல்வது என்ன?
Image Credit : Getty

ஆய்வு முடிவு சொல்வது என்ன?

மிகவும் சூடாகக் குடிப்பதற்குப் பதிலாக, குடிக்கும் பதம் வரும் வரை காத்திருப்பது நல்லது என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். தென் அமெரிக்காவில் 'மேட்' (mate) என்ற சூடான மூலிகை பானத்தை அதிகம் பயன்படுத்துபவர்களிடமும், உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் இதே போன்ற தொடர்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர் டாக்டர் கெரென் பேப்பியர் (Dr. Keren Papier) கூறினார்.

57
ஸ்குவாமஸ் செல் உணவுக்குழாய் புற்றுநோய்
Image Credit : Getty

ஸ்குவாமஸ் செல் உணவுக்குழாய் புற்றுநோய்

ஸ்குவாமஸ் செல் உணவுக்குழாய் புற்றுநோய் (Squamous cell oesophageal cancer) ஒரு அரிதான வகை. இது ஆண்டுக்கு சில ஆயிரம் பேரை மட்டுமே பாதிக்கிறது. உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் போன்ற பிற காரணிகளும் முக்கிய அபாயக் காரணிகளாக உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

67
புகை, மது பழக்கத்தை தவிர்த்தால்...
Image Credit : stockphoto

புகை, மது பழக்கத்தை தவிர்த்தால்...

புகைப்பிடிப்பதை தவிர்ப்பது மற்றும் மது அருந்துவதைக் குறைப்பது ஸ்குவாமஸ் செல் உணவுக்குழாய் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. நெஞ்செரிச்சல், அஜீரணம், தொண்டை அல்லது மார்பில் வலி, மற்றும் உடல் எடை குறைதல் ஆகியவை உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.
77
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்
Image Credit : Getty

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்

உணவுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கும் பழக்கவழக்கங்கள், புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. விழுங்குவதில் சிரமம், மது அருந்துதல், புகைப்பிடித்தல், உடல் பருமன், இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), மற்றும் அதிக சூடான பானங்களை தொடர்ந்து குடிக்கும் பழக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anti-Aging Foods: 40 வயதிலும் 25 போல இளமையாக இருக்கலாம்!
Recommended image2
Soya Chunks: இறைச்சி போல இருந்தாலும் அது இறைச்சியல்ல.! உண்மையில அது என்ன?
Recommended image3
மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
Related Stories
Recommended image1
summer tips சம்மரில் ஒரு நாளைக்கு எத்தனை டீ, காபி குடிக்கலாம்? 6 ஹெல்த் டிப்ஸ்!
Recommended image2
Best Summer Drinks : கோடையில் டீ, காபி குடிக்கிறீங்களா? உடல் சூட்டை குறைக்கும் 5 சூப்பர் பானங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved