மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்த ஸ்பெஷல் சிறுவாணி சிக்கன் ரெசிபி
செட்டிநாட்டு சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன் தான் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் உலகிலேயே அதிக சுவையானதாக கருதப்படும் சிறுவாணி தண்ணீரில் செய்யப்படும் ஸ்பெஷல் சிறுவாணி சிக்கன் ரெபிசி கொட்டு நாட்டு அசைவ மெனுவில் பிரபலமான ஒன்றாகும்.

சிறுவாணி சிக்கன் ரெசிபி :
கொட்டுநாட்டு பெருமைகளில் ஒன்று சிறுவாணி ஆறு. இந்த ஆற்றின் தண்ணீரில் சுவையே தனித்துவமானதாக இருக்கும். மண்வாசம் வீசும் தனிச்சுவையில் இருக்கும் சிறுவாணி தண்ணீரில் செய்யப்படும் அசைவ உணவுகள் வேறு எங்கும் கிடைக்காத மணம், சுவையுடன் இருக்கும். அசைவம் பிடிக்காதவர்களுக்கும் கூட ஆசையை தூண்டக் கூடியதாக இருக்கும். சிறுவாணியில் செய்யப்படும் சிக்கன் ரெபிசி அட்டகாசமான சுவையில் இருக்கும். நாட்டுக்கோழி, பிராய்லர் என எதில் செய்தாலும் இதன் சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி (அல்லது பிராய்லர்) - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 15-20
தக்காளி - 2 (நன்றாக நசுக்கியது)
கஸ்தூரி மெத்தி - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
நெய் (அல்லது நல்லெண்ணெய்) - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
சிறுவாணி மசாலா:
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5-6 இலைகள்
கோழிக்கோடு பிரியாணி – மலபார் மண்ணின் மணம் மாறாத அதே சுவையில்
செய்முறை :
- சிறுவாணி மசாலா தயார் செய்வதற்கு ஒரு வாணலியில் கொத்தமல்லி விதை, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுத்து, பொடியாக அரைக்கவும். இது தான் சிறுவாணி சிக்கனின் முக்கிய ரகசிய மசாலா
- சிக்கனை சுத்தம் செய்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறுவாணி மசாலா தூள் சேர்த்து குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
- அதிக நேரம் ஊறவிட்டால், சிக்கன் சுவை நன்கு சிக்கனில் சேரும்.
- ஒரு கனமான வாணலியில் நெய் (அல்லது நல்லெண்ணெய்) ஊற்றி, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- நசுக்கிய தக்காளி சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கிளறவும். ஊற வைத்த சிக்கனை சேர்த்து, மிதமான தீயில் 15 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குறைந்தது 20 நிமிடங்கள் சிக்கன் மென்மையாகும் வரை சமைக்கவும்.
- இறுதியாக, கஸ்தூரி மெத்தி தூவி, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கருவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.
பரிமாறும் முறை :
- சூடான சாதத்தில் ஒரு சொட்டு நெய் சேர்த்து, சிறுவாணி சிக்கன் குழம்புடன் பரிமாறலாம்.
- தேங்காய் எண்ணெயில் வறுத்த பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருக்கும்.
- இடியப்பம், ஆப்பம், தோசை போன்ற மென்மையான உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும்.
- சிறந்த கிராமத்து உணவாக இருக்கும்.
சிறுவாணி சிக்கன் – உணவின் ரகசியங்கள் :
- பாரம்பரிய மசாலா அரைத்து செய்வதால் நாட்டுக்கோழியின் சுவையை அதிகரிக்கும்.
- கறிவேப்பிலை, கொத்தமல்லி விதை, கிராம்பு சேர்த்து தனித்துவமான மணம்.
- தக்காளி, இஞ்சி-பூண்டு, மிளகு போன்றவை ஜீரண சக்தியை அதிகரிக்கும்.