பால் பொங்குறதுக்கு பின்னாடி இப்படி ஒரு அறிவியலா? இது தெரியாம போச்சே
நாம் அனைவரும் வீடுகளில் பால் காய்ச்சும் போது பால் கொதிநிலையை எட்டியதும் பால் பொங்கி கீழே ஊற்றுவதை பார்த்திருப்போம். ஆனால், அது ஏன் இப்படி நடக்கிறது என தெரியுமா?
பால் கொதிநிலை
காலை பொழுது விடிந்ததும் பெட் காஃபி குடிப்பது முதல் இரவில் படுக்கைக்கு செல்லும் போது பால் குடிப்பது வரை நம்பில் பெரும்பாலானோர் டீ, காஃபி, பால், ரோஸ் மில்க் என பல வகைளில் பாலை பயன்படுத்துகிறோம். அப்படி பாலை காய்ச்சும் போது பால் பொங்கி நம் வீடுகளின் அடுப்பில் ஊற்றும் நிகழ்வு அடிக்கடி அரங்கேறும்.
பால் கொதிநிலை
வீடுகளில் தண்ணீர், குழம்பு, எண்ணெய் என பல பொருட்களை சூடாக்குகிறோம். அவை அனைத்தும் அமைதியாக கொதிநிலையை அடைகிறது. ஆனால், இந்த பால் மட்டும் ஏன் கொதி நிலையை அடைந்ததும் பொங்கி கீழே ஊற்றுகிறது என நாம் என்றாவது சிந்தித்து உண்டா?
பால் பொருட்கள்
பாலில் கொழுப்பு, புரதம், நீர், கார்போ ஹைட்ரேட், தாது பொருட்கள் உள்ளிட்டவை அடங்கி உள்ளன. பாலை சுட வைக்கும் போது பால் கொதிநிலையை அடைந்ததும் நீர் கொதித்து நீராவியாக மாறுகிறது. அதே நேரத்தில் கொழுப்பு, புரதம் உள்ளிட்டவை தனியாக பிரிந்து பாலின் மேல் புறத்தில் ஆடையாக படர்கின்றது.
பால் கொதித்தல்
கொதிநிலையின் போது பாலில் உள்ள நீர் ஆவியாகி மேல்நோக்கி செல்கிறது. அந்த நீராவியை வெளியே செல்ல விடாமல் பாலாடை தடுக்கிறது. பாலாடையை தள்ளிக் கொண்டு நீராவி மேலே எழும்புகிறது. அப்போது தான் பால் பொங்கி கீழே ஊற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.
பால் கொதித்தல்
பால் பொங்கும் போது அடுப்பை குறைத்து வைப்பதால் பாலில் உள்ள நீரின் கொதிநிலை குறைக்கப்படுகிறது. அதே போன்று பாலை கிண்டும் போதும் ஆடை விலக்கப்பட்டு ஆவியாதல் தடையின்றி நடைபெறுகிறது. இதனால் பால் பொங்குவது தவிர்க்கப்படுகிறது.