MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Paniyaram: மரவள்ளிக்கிழங்கில் இப்படி ஒரு டேஸ்டியான பணியாரமா? ஒருமுறை செய்து பாருங்க!

Paniyaram: மரவள்ளிக்கிழங்கில் இப்படி ஒரு டேஸ்டியான பணியாரமா? ஒருமுறை செய்து பாருங்க!

Paniyaram: மரவள்ளிக்கிழங்கை வைத்து சுவையான பணியாரம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், தாளிப்பு, படிப்படியான செய்முறை, மரவள்ளிக்கிழங்கின் நன்மைகள் மற்றும் அதன் வேறு பெயர்களை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 15 2026, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
Image Credit : pinterest

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்

மாலை நேரத்தில் டீ-யுடன் சூடாக, மொறுமொறுப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? தினமும் ஒரே ஸ்நாக்ஸ் சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்படியென்றால் வீட்டில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கை வைத்து சுவையான பணியாரம் செய்து பாருங்கள். வழக்கமாக வேகவைத்து அல்லது வறுவலாக சாப்பிடும் மரவள்ளிக்கிழங்கில், சிறிது மசாலா சேர்த்து பணியாரம் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் சுவையான சிற்றுண்டியாக மாறிவிடும்.

வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த பணியாரம், காலை உணவு அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவும் பரிமாறலாம். குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, கப்பக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மரவள்ளிக்கிழங்கை வைத்து இந்த எளிய ரெசிபியை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்
Image Credit : pinterest

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக்கிழங்கு – 500 கிராம்
  • அரிசி மாவு – 1\2 கப்
  • கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – சிறிய துண்டு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – பணியாரம் சுட தேவையான அளவு

தாளிக்க:

  • கடுகு – 1\2 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – 1\2 டீஸ்பூன்
  • சீரகம் – 1\2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 1.
35
மரவள்ளிக்கிழங்கு பணியாரம் செய்வது எப்படி?
Image Credit : pinterest

மரவள்ளிக்கிழங்கு பணியாரம் செய்வது எப்படி?

  1. மரவள்ளிக்கிழங்கை நன்றாகக் கழுவி, தடிமனான தோலை முழுமையாக நீக்கி சிறு துண்டுகளாக வெட்டவும். பின்னர் தண்ணீரில் நன்றாக வேகவைக்கவும்.
  2. வெந்த கிழங்கை ஆறவைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். நடுவில் இருக்கும் நார் போன்ற பகுதி இருந்தால் அகற்றிவிடலாம்.
  3. மசித்த கிழங்குடன் அரிசி மாவு, கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசையவும். தேவையானால் சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாக தயாரிக்கவும்.
45
கார சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்
Image Credit : pinterest

கார சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்

4. பின்னர் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதை பணியாரம் மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

5. அதனைத்தொடர்ந்து, பணியாரக் கல்லை சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். மாவை உருண்டையாகவோ கரண்டியால் சிறு அளவாகவோ ஊற்றி மிதமான தீயில் சுடவும். அடிப்பகுதி பொன்னிறமானதும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் வேகவிடவும்.

6. இருபுறமும் நன்றாக வெந்ததும் சூடாக எடுத்துப் பரிமாறலாம். தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது கார சட்னியுடன் சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.

55
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் என்ன பலன்?
Image Credit : pinterest

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் என்ன பலன்?

மரவள்ளிக்கிழங்கு முக்கியமாக மாவுச்சத்து கொண்ட உணவு. அதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்க உதவும். மேலும் இதில் வைட்டமின் C உள்ளிட்ட சில ஊட்டச்சத்துகளும் உள்ளன. ஆனால், இது கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள கிழங்கு என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.

குறிப்பு: இது பொதுவான சமையல் குறிப்புகள் மட்டுமே. பொருட்களின் அளவு மற்றும் சுவைக்கேற்ப செய்முறையில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆரோக்கிய குறிப்புகள்
உணவு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Recommended image2
Crispy Spicy Thattai : மொறு மொறு கார தட்டை..கடைகளில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Recommended image3
Sweet Somas : தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறுப்பான ஸ்வீட் சோமாஸ்..தேங்காய் பூரணத்துடன் அசத்தல் ரெசிபி!
Related Stories
Recommended image1
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Recommended image2
Low oil Easy Breakfast: எண்ணெய் குறைவு..சுவை நிறைவு! காலை உணவுக்கு இந்த ஈஸி ரெசிபி ட்ரை பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved