MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்

kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்

kollu rasam: கொள்ளு ரசம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், கொள்ளை வேகவைக்கும் முறை முதல் மிளகு, சீரகம் சேர்த்து ரசம் தயாரிப்பது வரை படிப்படியான செய்முறை மற்றும் அதன் ஊட்டச்சத்து பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Asianet News
Published : Sep 14 2026, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க!
Image Credit : pinterest

கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க!

கொள்ளு என்றாலே உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் பாரம்பரிய பயறு வகைகளில் ஒன்று. பொதுவாக கொள்ளை ஊறவைத்து சமைப்பது, கொள்ளு சுண்டல் செய்வது போன்றவற்றைத் தாண்டி, அதைக் கொண்டு சுவையான கொள்ளு ரசமும் தயாரிக்கலாம். குறிப்பாக சாதத்துடன் சூடாகப் பரிமாறும்போது, அதன் மணமும் சுவையும் தனி ருசியைத் தரும். வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கொள்ளு ரசம் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேவையான பொருட்கள்
Image Credit : pinterest

தேவையான பொருட்கள்

கொள்ளு – 1\2 கப்

தக்காளி – 2

பூண்டு – 4 முதல் 5 பல்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1\4 டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

கடுகு – 1\2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

Related Articles

Related image1
Rasam Tips: ரசம் மணக்கலையா? இந்த ஒரு டிப்ஸ் செய்தால் மணம் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்
Related image2
rasam recipes: சட்டென தயார் செய்ய ஏற்ற 10 வகையான ரசம் ரெசிபிகள்
34
செய்முறை
Image Credit : pinterest

செய்முறை

படி 1: முதலில் கொள்ளை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 5–6 விசில் வரும் வரை வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் கொள்ளையை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

படி 2: ஒரு கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் லேசாக வறுக்கவும். ஆறியதும் அவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

படி 3: வேகவைத்த கொள்ளில் இருந்து சிறிதளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து, கொள்ளு வேகவைத்த தண்ணீருடன் கலந்து கொள்ளவும். இது ரசத்திற்கு நல்ல அடர்த்தியையும் சுவையையும் கொடுக்கும்.

படி 4: ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், நறுக்கிய தக்காளி, நசுக்கிய பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.

படி 5: புளியின் பச்சை வாசனை போனதும் அரைத்த மிளகு–சீரகப் பொடி மற்றும் கொள்ளுக் கலவையைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். ரசம் நன்றாக நுரை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.

படி 6: இறுதியாக கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறலாம். சூடான சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து இந்த கொள்ளு ரசத்தை பரிமாறினால், வீட்டுச் சாப்பாட்டின் சுவையே தனியாக இருக்கும்.

44
கொள்ளு ரசத்தின் பயன்கள்
Image Credit : pinterest

கொள்ளு ரசத்தின் பயன்கள்

கொள்ளில் புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்துக்கு உதவக்கூடும். புரதம் நிறைந்த உணவாக இருப்பதால் உணவில் ஊட்டச்சத்து சமநிலையை மேம்படுத்த உதவும்.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
உணவு சேர்க்கைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Brinjal Chutney: கத்தரிக்காய் சட்னி – ஒருமுறை செய்து பாருங்க..நாக்கை சப்புக்கொட்ட வைக்கும்
Recommended image2
Healthy Breakfast : 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 10 ஆரோக்கியமான காலை உணவுகள்!
Recommended image3
Moringa Chutney : அசைவத்தையே ஓரங்கட்டும் பெங்களூரு ஸ்பெஷல் முருங்கைக்கீரை துவையல்!
Related Stories
Recommended image1
Rasam Tips: ரசம் மணக்கலையா? இந்த ஒரு டிப்ஸ் செய்தால் மணம் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்
Recommended image2
rasam recipes: சட்டென தயார் செய்ய ஏற்ற 10 வகையான ரசம் ரெசிபிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved