MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • மலபார் பிரவுன் பிரியாணி – சுவையாக பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

மலபார் பிரவுன் பிரியாணி – சுவையாக பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

மலபாரின் கடல் உணவுகள் தனித்துவம் வாய்ந்தவையாகும். இங்கு செய்யும் பிரியாணியே அமோக சுவை கொண்டதாக இருக்கும். அதிலும் வித்தியாசமான காரசாரமான இறால் பிரியாணியின் சுவையே அலாதியாக இருக்கும்.

2 Min read
Author : Priya Velan
Published : Mar 22 2025, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மலபார் இறால் பிரியாணி :

மலபார் இறால் பிரியாணி :

கேரளாவின் மலபார் சமையல் கலையில் பிரியாணிக்கு ஒரு தனி இடம் உண்டு. அதிலும் கடல் உணவுகளின் சிக்னேச்சர் உணவாக இருப்பது இறால் பிரியாணி. மிருதுவான இறால், வாசனை மிகுந்த மசாலா, மெல்லிய பாஸ்மதி அரிசி சாதம் – இவை சேர்ந்து இந்த உணவை ஒரு சுவாரஸ்யமானதாக மாற்றுகின்றன. இதை ஒரு முறை ருசித்தால் கூட பல நாட்களுக்கு இதன் சுவை மனதில் அப்படியே நிலைத்து இருக்கும்.
 

25
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 2 கப்
சுத்தமான பெரிய இறால் – 300 கிராம்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
புதினா – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
தயிர் – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மசாலா தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பட்டை – ஒரு துண்டு
வெண்ணெய் அல்லது நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கசகசா – 1 டீஸ்பூன் (விருப்பம்)
தேங்காய் பால் – 1/2 கப் (சுவைக்கேற்ப)
 

35
தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

- முதலில் அரிசியை கழுவி, 20 நிமிடம் நீரில் ஊறவைக்கவும். 
- இறாலை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- பெரிய பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கி, கிராம்பு, ஏலக்காய், பட்டையை தாளிக்கவும்.
- வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து கலக்கி, அது குழைந்து வந்தவுடன் இறாலை சேர்க்கவும்.
- இறால் நன்கு வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- ஊற வைத்த அரிசியை, தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்துக் கொள்ளவும்.
- மிதமான தீயில் 10-12 நிமிடம் கழித்து, பிரியாணி நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- சூடாக பரிமாறும் போது மேலே கொத்தமல்லி, நெய் சேர்த்து மணமாக பரிமாறலாம்.

45
பரிமாறும் முறை :

பரிமாறும் முறை :

- மலபார் இறால் பிரியாணிக்கு, வெந்தய குருமா, ரைத்தா, உப்பு மாங்காய் ஆகியவை சிறந்த கூட்டாக இருக்கும். இதன் சுவையை இன்னும் சிறப்பாக்க ஒரு கப் வாழைப்பழம் அல்லது பாயசத்துடன் முடிக்கலாம்.

மேலும் படிக்க:7 அற்புதமான ஹைதராபாதி உணவுகள் – உங்கள் வாழ்நாளில் ஒருமுறை சுவைக்க வேண்டியவை!
 

55
மலபார் பிரியாணியின் சிறப்பம்சங்கள்:

மலபார் பிரியாணியின் சிறப்பம்சங்கள்:

- பரிமாறும் போது நெய் சேர்ப்பதால் அதன் சுவை மேலும் உயரும்.
- தேங்காய் பால் சேர்ப்பதால் இது ஒரு மிருதுவான சுவையை அளிக்கும்.
- இறாலை அதிக நேரம் சமைக்காமல் வைத்தால் அது மென்மையாக இருக்கும்.
- மலபாரின் பாரம்பரிய மசாலா கலவைகள் இதை தனித்துவமாக மாற்றுகின்றன.

மலபாரின் பாரம்பரியத்தை பசுமையாக கொண்டுவரும் இந்த பிரியாணி, ஒரு முறை சுவைத்தால் மறக்க முடியாத அனுபவம் தரும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Recommended image3
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved