MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • பாய்வீட்டு மட்டன் தால்சா செய்வது எப்படி...பிரியாணிக்கு செம காம்போ

பாய்வீட்டு மட்டன் தால்சா செய்வது எப்படி...பிரியாணிக்கு செம காம்போ

பிரியாணிக்கு செம சூப்பரான காம்போ என்றால் அது பாய்வீட்டு மட்டன் தால்சா தான்.  சால்னாவை விட தால்சா தனி சுவையுடன் இருக்கும். இந்த தால்சாவை அதே பாய்வீட்டு சுவை, மணத்துடன் நம்ம வீட்டில் எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Priya Velan
| Updated : May 10 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தால்ச்சா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

தால்ச்சா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 250 கிராம் 

துவரம் பருப்பு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 2 

பச்சை மிளகாய் - 2-3 

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

தனியா தூள் - 1 டீஸ்பூன்

சீரக தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

புளி கரைசல் - 1/4 கப்

தேங்காய் பால் - 1/2 கப்

கொத்தமல்லி தழை - கொஞ்சம்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தால்ச்சா தாளிப்பதற்கு:

தால்ச்சா தாளிப்பதற்கு:

பட்டை - 1 சிறிய துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 1

பிரியாணி இலை - 1

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - கொஞ்சம்

34
தால்ச்சா செய்முறை:

தால்ச்சா செய்முறை:

முதல்ல துவரம் பருப்பை நல்லா கழுவி, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து குக்கர்ல ரெண்டு விசில் விட்டு வேக வச்சு எடுத்துக்கோங்க. ரொம்ப குழைய விட்டுறாதீங்க.

குக்கர்ல எண்ணெய் ஊத்தி சூடானதும், பட்டை,லவங்கம்,ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும் பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்கவும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கவும், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கவும், பின்னர் ஆட்டுக்கறியை சேர்த்து கறியோட கலர் மாறுற வரைக்கும் வதக்கவும், கொஞ்சம் உப்பு சேர்த்து குக்கரை மூடி கறி நல்லா வேகுற வரைக்கும் வேக வைக்கவும்.

கறி வெந்ததும், அதனுடன் வேக வச்ச துவரம் பருப்பை மற்றும் புளி கரைசலை ஊத்தி ஒரு கொதி விடவும்,.
கரம் மசாலா தூள், கொத்தமல்லி தழை சேர்த்து, கடைசியா தேங்காய் பால் சேர்த்து லேசா கொதிக்க விட்டு  அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. சூப்பரான தால்ச்சா ரெடி, இதை சுட சுட பிரியாணியோட பரிமாறி அசத்துங்க, இது பிரியாணிக்கு ஒரு அருமையான காம்பினேஷனா இருக்கும். 
 

44
தால்ச்சா ஏன் பிரியாணிக்கு பெஸ்ட் காம்பினேஷன்?

தால்ச்சா ஏன் பிரியாணிக்கு பெஸ்ட் காம்பினேஷன்?

பிரியாணி கொஞ்சம் ரிச்சான டிஷ். அதுல இருக்கிற மசாலா, நெய் எல்லாம் ஒரு ஹெவியான ஃபீலை கொடுக்கும். இந்த தால்ச்சால இருக்கிற புளிப்பு சுவையும், லேசான காரமும் பிரியாணியோட அந்த ரிச்னஸை பேலன்ஸ் பண்ணும். அதனாலதான் பிரியாணிக்கு தால்ச்சா ஒரு அட்டகாசமான சைட் டிஷ்ஷா இருக்கு. நீங்களும் உங்க வீட்ல பிரியாணி செய்யும்போது இந்த தால்ச்சாவையும் ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
சமையலறை குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Recommended image3
Chicken Noodles Cutlet: நூடுல்ஸில் இப்படி ஒரு ஸ்நாக்ஸா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறுமொறு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்!
Related Stories
Recommended image1
மலபார் பிரவுன் பிரியாணி – சுவையாக பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?
Recommended image2
ஆம்பூர் பிரியாணி – பாரம்பரிய முறையில் இப்படி செய்யுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved