தினமும் '1' வாழைப்பழம்; 'பிபி' குறைய!! சிறந்த '5' உணவுகள் தெரியுமா?
உயர் இரத்த அழுத்தம் குறைய சாப்பிட வேண்டிய 5 உணவுகளை இங்கு காணலாம்.

Hypertension Control Foods List: உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயாகும். அதுமட்டுமின்றி பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிது. அதிகளவில் மன அழுத்தம் கொண்டிருப்பவர்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் கூட உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளை இங்கு காணலாம்.
banana and high blood pressure
வாழைப்பழம்;
வாழைப் பழம் குறைந்த விலையில் வாங்கக் கூடிய அற்புதமான பழமாகும். இதில் சத்துக்கள் கொட்டி கிடக்கின்றன. தினமும் வாழைப்பழம் உண்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. இதில் தசைகளை வலுவாக்கும் சத்துக்கள் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
guava and high blood pressure
கொய்யா;
கோடைகாலத்தில் கொய்யா சாப்பிடுவது மிகவும் நல்லது. உங்களுக்கு நீரிழப்பு ஏற்படும்போது உடலில் நீர், எலக்ட்ரோலைட்டுகளை ஒழுங்குபடுத்த கொய்யா உதவும். கொய்யா சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராகும்.
இதையும் படிங்க: பி.பி அதிகமா இருந்தால் 'காபி' அதிகம் குடிக்காதீங்க! ஆய்வு சொல்வது இதுதான்!
yogurt and high blood pressure
யோகர்ட்:
யோகர்ட்டில் குறைந்த அளவில் தான் கொழுப்புள்ளது. பொதுவாக பால் பொருட்கள் கால்சியத்தை தரக் கூடியவை. யோகர்ட் உண்பதால் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கிடைக்கும். பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்களும் இதில் உள்ளன. இதை உண்பதால் இரத்த அழுத்தம் உயராமல் குறைக்க முடியும்.
இதையும் படிங்க: ரத்த அழுத்தம் இருக்கா? உடற்பயிற்சி செய்யும் போது இந்த '3' விஷயங்களை மறக்காதீங்க!
Beetroot and high blood pressure
பீட்ரூட்:
பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரிக் ஆக்சைடு காணப்படுகிறது. இதை உண்ணும்போது இரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் பீட்ரூட் சாறு குடித்தால் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 4 அல்லது 5 mmHg வரை குறைய வாய்ப்புள்ளது.
mango and high blood pressure
மாம்பழம்:
கோடையில் மாம்பழம் சீசன் ஆரம்பமாகிவிடும். இதை உண்பது மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கவிடும். ஏனெனில் மாம்பழத்தின் தித்திப்பை உணர்பவர்கள் எப்படி மகிழாமல் இருக்க முடியும்? மாம்பழம் சுவையானது மட்டுமல்ல; நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம் போன்றவையும் கொண்ட சத்தான உணவாகும். ஆகவே இதை உண்ணும்போது உயர் இரத்த அழுத்தம் குறையும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் உண்ணும்போது கவனமாக இருக்கவேண்டும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தலாம்.