ரத்த அழுத்தம் இருக்கா? உடற்பயிற்சி செய்யும் போது இந்த '3' விஷயங்களை மறக்காதீங்க!
Workout Tips For High Blood Pressure : உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

ரத்த அழுத்தம் இருக்கா? உடற்பயிற்சி செய்யும் போது இந்த '3' விஷயங்களை மறக்காதீங்க!
தற்போது பெரும்பாலானோர் உயரத்தை அழுத்த பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், மருந்துகளுடன் உணவு மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உங்களது அன்றாட வழக்கத்தில் சில சிறப்பு மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். அவற்றில் ஒன்றுதான் உடற்பயிற்சி. உடற்பயிற்சியை உங்களது வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டால், அது நிச்சயம் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா? உடற்பயிற்சி உங்களது இதயத்தை வலிமையாக்கும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மன அழுத்தத்தை குறிக்கும் இன்னும் பல நன்மைகளையும் உங்களுக்கு வழங்கும். இதற்கு உங்களது தினசரி வழக்கத்தில் நடைபெற்று முதல் லேசான வீழ்ச்சி வரை என எதையும் நீங்கள் செய்யலாம்.
பிபி நோயாளிகள்
பிபி நோயாளிகளுக்கு உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில், நீங்கள் பிரச்சனைகளை தான் சந்திக்க நேரிடும். எனவே இந்த பதிவில் பிபி நோயாளிகள் உடற்பயிற்சி செய்யும் போது என்னென்ன விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
கார்டியோ உடற்பயிற்சி:
நீங்கள் பிபி நோயாளியாக இருந்தால் கார்டியோ உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தீவிரமாக அல்ல, மிதமாக தான் செய்ய வேண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் வேகமான நடைபயிற்சி முதல் நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என எதை வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் தினமும் கார்டியோ உடற்பயிற்சி செய்து வந்தால் உங்களது ரத்த ஓட்டம் மேம்படும். அதே வேளையில், கூடுதல் கலோரிகளும் எரிக்கப்படும். இதன் காரணமாக உங்களது எடையை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். அதுமட்டுமின்றி, இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.
வலிமை பயிற்சி:
உங்களுக்கு உயரத்தை அழித்ஒத பிரச்சனை இருந்தால் வாரத்திற்கு 2-3 முறை லைட் வெயிட்டுகளுடன் வலிமை பயிற்சி செய்யலாம். நீங்கள் இந்த பயிற்சி செய்யும்போது அது உங்கள் தசை வளர்ச்சிக்கு பெரிது உதவும். மேலும் இந்த பயிற்சியானது, வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.
இதையும் படிங்க: எவ்ளோ ரத்த அழுத்தம் இருந்தாலும் ஈஸியா குறைக்கலாம்.. '5' பெஸ்ட் உணவுகள்!!
நீரேற்றமாக இருங்கள்:
உடற்பயிற்சி செய்யும் போது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் அதுவும் குறிப்பாக இருந்தால் அதில் இன்னும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நீரிழப்பு இதயத்தில் கூடுதல் அழுதத்தை ஏற்படுத்தும் மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்யும் முன் மற்றும் பிறவி கண்டிப்பாக தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இதனால் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலானது சரியாக வேலை செய்யும் மற்றும் நீங்கள் வசதியாகவும் உணர முடியும். இதனால் உங்களது இதயமானது தேவையற்ற அழுத்தத்தால் பாதிக்கப்படாது.
இதையும் படிங்க: பி.பி அதிகமா இருந்தால் 'காபி' அதிகம் குடிக்காதீங்க! ஆய்வு சொல்வது இதுதான்!
நினைவில் கொள்:
உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. ஆனால் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் முதலில் ஒரு நல்ல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஏனெனில் உங்களது ஆரோக்கியத்தைப் பொறுத்து, அவர் எந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். இதனால் நீங்கள் ரத்த அழுத்த அதிகரிப்பால் பாதிக்கப்பட மாட்டீர்கள்.