வெயில்ல அசிடிட்டி நெஞ்சு எரிச்சல் வருவதை தவிர்க்கணும்னா இதை கண்டிப்பா சாப்பிடுங்க!
கோடைகாலத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவு பொருள்களை இந்த பதிவில் காணலாம்.
கோடைகாலம் வந்தாலே வெயிலோடு அவதியுறுவோம். இந்த நேரத்தில் உணவு முறையில் கவனம் செலுத்தாதவர்களுக்கும், சரியான நேரத்தில் தண்ணீர் குடிக்காதவர்களுக்கும் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். காரசாரமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு கூடுதலாக சிரமம் ஏற்படும். ஏனென்றால் அவற்றை உண்ணும்போது வயிறு உப்புசம், அசிடிட்டி ஆகியவை ஏற்படும். வெயில் கால வெப்பத்தை தணிக்கும் வகையான உணவுகளை உண்ணாமல் விருப்பத்திற்கு சாப்பிடும்போது வயிற்றின் இரைப்பை சுரப்பிகளில் அதிகமான வெப்பம் இருப்பது தொடரும். இதனால் அமிலத்தன்மை நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய் துர்நாற்றம், ரிஃப்ளக்ஸ் ஆகியவை வரும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
பழங்கள்
நம் உடலில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையை வாழைப்பழங்கள் நடுநிலையாக்கும். இதனுடைய பி.எச் மதிப்பு (Ph value) அமிலத்தன்மை அதிகரிப்புக்கு ஏற்றது. இதனை காலை உணவாக உண்ணலாம். இந்த பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் சாப்பிடும் போது உடலில் அமிலத்தன்மை சீராக இருக்கும். முலாம்பழங்கள், தர்பூசணி கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள். இதில் அதிகளவு ஆக்ஸிஜனேற்றங்கள், நார்ச்சத்து ஆகியவை காணப்படுகிறது. இவை உடலை நீரேற்றமாக வைக்கும். பி.எச் அளவை குறைக்கிறது. பப்பாளி, ஆப்பிள் ஆகிய பழங்கள் உண்பதால் அசிடிட்டி பிரச்சனை வராது.
அசிடிட்டிக்கு குளிர்ந்த பால் நல்லதா?
வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கவும், நெஞ்செரிச்சலை நீக்கவும் குளிர்ந்த பாலை அருந்தலாம். சர்க்கரையோ, மஞ்சளோ போன்ற எந்த பொருட்களும் சேர்க்காமல் குளிர்ந்த பால் குடித்தால் நெஞ்செரிச்சல் மட்டுப்படும். குளிர்ந்த பால் மட்டும் இல்லாது தயிர், மோர் கூட குளிர்ச்சியாக அருந்தலாம். இவை உடம்பில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாவுக்கு நல்லது. இதனால் வயிற்றில் அமிலம் உருவாவது தடுக்கப்படும். செரிமான அமைப்பு மேம்படும்.
இளநீர்!
வெயில் காலத்தில் அதிக நீராகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த வகையில் இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது இதில் இருக்கும் சுத்திகரிப்பு பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறச் செய்யும் தேங்காயில் காணப்படும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது நாள்தோறும் ஒரு இளநீர் குடிப்பதால் அசிட்டிட்டியை தவிர்க்கலாம்.
அசிடிட்டிக்கு இஞ்சி
இரைப்பை குடல் கோளாறுகள் குணமாக இஞ்சி உண்ணலாம். இஞ்சி நம்முடைய உடலில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையை எதிர்த்து போராட வைக்கும். தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Coffee: காபி குடித்தால் தான் வேலையே ஓடுமா? ஆனா 2 முறைக்கு மேல காபி குடித்தால் பாதிப்பு! இத்தனை தீமைகள் இருக்கு
அசிடிட்டிக்கு வெல்லம்
வெல்லம் சாப்பிடும்போது உடலின் அமிலத்தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் மெக்னீசியம் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதோடு, உடலின் உஷ்ணத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். கோடை காலத்தில் கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றில் பானங்கள் தயாரித்து அருந்தலாம்.
இதையும் படிங்க: தேங்காய் நார் வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்! இனிமேல் மறந்தும் தூக்கி போடாதீங்க! செம்ம டிப்ஸ்!!